tamilnadu

img

கைவிடும் வரை போராட்டம் தொடரும் - பெ.சண்முகம்

எச்பிசிஎல் பெட்ரோலியம் கிடங்கு அமைக்கும் திட்டம்

தருமபுரி, மார்ச் 10- எச்பிசிஎல் சேமிப்பு கிடங்கு அமைப்பதை கைவிட்டு, இத்திட் டத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொது செய லாளர் பெ.சண்முகம் தலைமையில்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு செவ்வாயன்று காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் சிவாடி கிராமத்தில் பெரும் அளவில் தலித் மக்கள் வசித்து  வருகின்றனர்.இவர்கள் அரை ஏக்கர்  முதல் ஒரு ஏக்கர் வரை நிலம் வைத்தி ருக்கும் சிறு,குறு விவசாயிகளாவர். இந்த சூழலில் மத்திய அரசு விஜய வாடா-தருமபுரி (விடிபிஎல்) குழாய் மூலம் எச்பிசிஎல் நிறுவனம்  சிவாடி யில் பெட்ரோலியம் சேமிப்பு கிடங்கு  அமைக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தலித் மக்களின்  நிலத்தை கையகப்படுத்தும் முயற்சி யில் இறங்கி உள்ளது. இதில் விவசாயி களின் ஒப்புதல் இல்லாமல் அளவீடு  செய்யும் பணியை வருவாய்த்துறை யினரால் முயற்சிக்கின்றனர்.  இந்நிலையில் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என ஆட் சேபம் தெரிவித்து சிவாடி ஊர்பொது மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 2018 ஆம்  ஆண்டு மே 21ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக் கப்பட்டது.ஆட்சியரும் அரசுக்கு  பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் இத்திட்டத்தை எதிர்க்க வில்லை. மாறாக பாலக்கோடு அருகே  உள்ள மாரண்ட அள்ளி, காடுசெட்டிப் பட்டி, கும்மனூர் பகுதி ரயில்வே இருப்பு பாதை ஒட்டிய வனப்புறம் போக்கு நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை தெரிவித்தது. மேலும், கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று  சிவாடியில் நடை பெற்ற கிராமசபை கூட்டத்தில் இத் திட்டத்தை அமல்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மான நகல் மாவட்ட வரு வாய் அலுவலரிடம் கொடுக்கப் பட்டது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி யன்று இத்திட்டத்தை கைவிடக் கோரி மனுகொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்ப்பின் காரணமாக பாலக் கோடு அருகே கும்மானூரில் இத் திட்டத்திற்காக நிலத்தை பார்வை யிட்டு சர்வே செய்ததாக தெரிகிறது. மேலும் தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம், சிவாடி சார்பில் ஊர்மக்கள் பிப்ரவரி 26ஆம் தேதியன்று இத் திட்டம் குறித்து சென்னை தலைமை  செயலக முதன்மை செயலாளர், தொழில்துறை செயலாளர் மற்றும்  முதல்வரின் தனிசெயலாளர் ஆகி யோரை சந்தித்து மனு அளிக்கப் பட்டது.முதன்மை செயலாளரும்  இத்திட்டத்தினால் விவசாயிகளுக்கு  பாதிப்பு இருக்கும் பட்சத்தில் வேறுஇடத்தில் அமைக்கப்படும் என தெரிவித்தார். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில்இருந்து விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சூழல் 60 சத விவசாயிகள் இத்திட்டத்துக்கு நிலம்  கொடுத்து விட்டார்கள் எனவும், சிறு  எண்ணிக்கையிலான விவசாயி களிடம் நிலத்தை பெறவேண்டி யுள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறி  வருவது கண்டிக்கதக்கது உண்மைக்கு  புறம்பானது. மேலும் இப்போது நிலம் கொடுத்தால் ரூ 25 லட்சம் இழப்பீடு தரப்படும் எனவும், பிறகு கொடுத்தால் ரூ 3.50 லட்சம் என விவசாயிகளை அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். இது கண்டிக்க தக்கது. விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும்  நிலையில், விவசாயிகள் இத்திட் டத்துக்கு நிலம் வழங்கியதாக அதி காரிகள் நாளிதழ்களில் அறிக்கை  வெளியிடுவது உண்மைக்கு புறம் பானது.

எனவே இத்திட்டத்தை சிவாடியில் அமைப்பதை கைவிட்டு, பாலக்கோடு அருகே வனப்புறம்போக்கு நிலத்தில் செயல்படுத்த வேண்டும் என போராட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. காத்திருப்பு போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுணன், சிவாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம்,  விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.எஸ்.சின்னராஜ், சிவகுரு,ரமேஷ், இளையராஜா, பிரபு,மாது,சித்தன், லட்சுமணன், காசி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது, தமிழகத்தில் எட்டுவழிச்சாலை,ஹைட்ரோகார்பன்,கெயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி விவசாய நிலங்களை பாழ்படுத்த மத்திய, மாநில  அரசுகள்  நினைக்கிறது. விவசாயி களின் தொடர் போராட்டத்தின் விளை வாக எட்டுவழிச்சாலை திட்டம் கை விடப்பட்டுள்ளது. அதேபோல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட் டத்தின் விளைவாக இத்திட்டத்தை கைவிட்டு காவேரி பகுதியை பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவாடியில் எச்பிசிஎல் நிறுவனம் பெட்ரோலியம் கிடங்கு  அமைக்க முயற்சிக்கிறது. இத் திட்டத்திற்கு தலித் மக்களின் வாழ்வா தாரமான விவசாய நிலத்தை பறிக்க  மாவட்ட ஆட்சியர் முயற்சித்துவருவது கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர் நலத்துறை செயலா ளரை சந்தித்து மனு அளிக்கும்போது சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலத் தில் இத்திட்டத்தை அமைக்கலாம் என  தெரிவித்த நிலையில், மாவட்ட  நிர்வாகம் சிப்காட் நிலத்தில் இத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். இத்திட்டதிற்கு நிலம் வழங்கினால் ஒரு ஏக்கருக்கு ரூ 25லட்சம் வழங்கு வதாக விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற நினைப்பது கண்டிக்கதக்கது. இது மோசடியான வேலையாகும்.  விவசாயிகள் சங்கம் இத்திட் டத்தை எதிர்க்கவில்லை. விவசாய நிலத்தில் அமைப்பதை கைவிட்டு புறம்போக்கு தரிசு நிலத்தில் அமைக்க வேண்டும். சிவாடியில் இத்திட்டம் அமல்படுத்தபடமாட்டாது என மாவட்டநிர்வாகம் அறிவிக்கும் வரை  விவசாயிகள் சங்கம் போராட்டம் தொடரும் என தெரிவித்தார். காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலை யில், மதிய உணவினை போராட்டம் நடக்கும் இடத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாவட்டசெயற்குழு உறுப் பினர் பி.இளம்பரிதி, ஒன்றிய செய லாளர் கே.குப்புசாமி, அந்தோனி ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

கைது

இந்நிலையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் பலவந்தமாக கைது செய்தனர்.