மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் காடையாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, காடையாம்பட்டி பகுதியில் பாய் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ தமிழரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் அரியாக் கவுண்டர், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமா.வசந்த், கொமதேக லோகநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஜெயமோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர குழு சார்பில் ஆறு மையங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், மாநகர செயலாளர் எம்.முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர் என்.பிரவீன்குமார், சேலம் வடக்கு மாநகரகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.