tamilnadu

img

என்பிஆர்-என்சிஆர் பதிவேடு தயாரிக்கக் கூடாது

அதிமுக அரசுக்கு திமுக செயற்குழு வலியுறுத்தல்

சென்னை, ஜன. 21- தந்தை பெரியார் குறித்து  ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுகவின் அவசர செயற்  குழு கூட்டம் அக்கட்சித் தலை வர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் செவ்வாயன்று(ஜன.21) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. நடந்து முடிந்த  ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விரைவில் நடை பெற உள்ள நகர்ப்புற உள்  ளாட்சித் தேர்தலில் மேற் கொள்ள வேண்டிய பணி கள் குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்  றியை வழங்கிய தமிழக மக்க ளுக்கு நன்றி, மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி களுக்கான உள்ளாட்சித் தேர்  தலை உடனடியாக நடத்த வேண்டும், மீதமுள்ள 9  மாவட்டங்களுக்கும் உள் ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடி மக்கள் பதி வேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என மாநில அரசு  அறிவிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க  வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. ஆளும் அதிமுக அர சின் தோல்விகள் என்ற பெய ரில் தயாரிக்கப்பட்ட பட்டி யலை மக்களிடம் கொண்டு  சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த ஸ்டா லின், வரும் 24 ஆம் தேதி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றார். இதற்கிடையில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசி யது குறித்து கேள்வி எழுப்  பப்பட்டது. அதற்கு பதில ளித்த ஸ்டாலின், நண்பர் ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்றும் அவர் அரசியல் வாதி இல்லை எனவும் குறிப்  பிட்டார். மேலும், தமிழ கத்திற்காக 95 வயது வரை  பாடுபட்ட தந்தை பெரி யாரை பற்றி பேசும்போது ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என்றார்.