கோவை, ஜூன் 13- மேட்டுப்பாளையம் அருகே யுள்ள கிராமத்தினுள் புகுந்து கால் நடைகளை கொன்று வந்த சிறுத்தை பிடிபட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள மலை யடிவார பகுதியில் அமைந்துள்ளது மோத்தேபாளையம் என்னும் கிராமம். இக்கிராமத்தில் வாழை, தென்னை, கரும்பு, காய்கறிகள் என விவசாயமே பிரதான வாழ்வாதார தொழிலாகும். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் ஊர் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்தி ருந்தனர். சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தை ஒட்டி யுள்ள மலைக்காட்டில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் ஊருக் குள் நுழைந்து அங்குள்ள ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை தனது உணவாக்கி வந்தது. இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட வாழை தோட்டங்களுக்குள் சிறுத் தைகளின் நடமாட்டத்தைப் பார்த்த மக்கள் பீதியில் தங்களது விவசாய தோட்டங்களுக்கு செல்வதற்கே அஞ்சினர். இதுகுறித்து வனத்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டு அதில் ஒரு சிறுத்தையும் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டு சென்று வனத்துறையினர் விட்டதால் இப் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் இதன் பின்னரும் சிறுத் தைகளின் தாக்குதல் சம்பவங்கள் குறையவில்லை. நாய்களின் மாமி சம் பிடித்து விட்ட காரணத்தினால், தோட்ட பாதுகாப்பிற்கு வளர்க்கப் படும் நாய்கள் மட்டுமின்றி தெரு நாய்களையும் உணவாக்கி வந்துள் ளது. மேலும், ஆடுகள், கன்றுக் குட்டிகள் என வரிசையாக கொல் லப்பட்டதால் கலக்கத்தில் ஆழ்ந்த ஊர் மக்கள், இதுகுறித்து வனத் துறைக்கு மீண்டும் புகார் அளித்த னர். இதனைத் தொடர்ந்து கண் காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட் டது. எனவே சிறுமுகை வனத்துறை யினர் மோத்தேபாளையம் கிரா மத்தில் கடந்த மாதம் மீண்டு மொருமுறை கூண்டு வைத்தனர். அதனுள் சிறுத்தைக்கு பிடித்த நாய், ஆட்டுக்குட்டி போன்ற வற்றை மாற்றிமாற்றி கட்டி வைத்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மோத்தே பாளையம் கிராமத்தினுள் நுழைந்த சிறுத்தை ஒன்று கூண்டுக்குள் இருந்த ஆட்டுக்குட்டியினை உண வாக்கி கொள்ள முயன்ற போது சிக்கி கொண்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, பிடிபட்ட சிறுத்தை இரண்டு வயதான பெண் சிறுத்தை என்றும், இதனை ஈரோடு மாவட் டம், சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தெங்குமராடா காட்டுக் குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விட முடிவெடுக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தனர்.