கோவை, ஆக. 6- கோவை மாவட்டம், உக் கடம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பெரிய வளைவுப்பலகை ஒன்று உள்ளது. இப்பலகையா னது பல நாட்களாக வலு விழந்து நிலையில் காணப் பட்டது. இந்நிலையில், புத னன்று நள்ளிரவு வந்த லாரி ஒன்று அந்த பலகையின் மீது மோதியதில் கீழே சரிந் தது. இரவு நேரம் என்பதால் உயிர்சேதம் ஏதுவும் இல்லா மல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதைய டுத்து தகவலறிந்து சம்ப வம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராட்சத கிரேன் மூலம் அந்த பலகையை அகற்றினர். இந்த சம்பவம் பகல் நேரத்தில் நடந்து இருந்தால் பொதுமக்களின் நடமாட் டம் அதிகம் இருக்கும் என்ப தால் பெரும் சேதம் ஏற்பட்டி ருக்கக் கூடும். ஆனால் அது தற்போது தவிர்க்கப்பட்டுள் ளது. எனவே, விரைந்து அப்பகுதியில் நடக்கும் மேம் பால பணிகளை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியா பாரிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.