tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

திருப்பூர், டிச. 21 - திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக் கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி பல்லடம் உள்ளிட்ட மூன்று ஊர்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சனிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சின்னங்கள் இல்லாமல் தேர்தல் நடைபெறும். அந்த வாக்குச்சீட்டுகளில் சின்னங் கள் மட்டும் இருக்கும். வேட்பாளர் பெயர் இருக்காது. வார்டு உறுப்பினர்களுக்குரிய வாக்குச் சீட்டு வெள்ளை நிறத்தி லும் மற்றும் இரு வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வ தற்கு வெள்ளை மற்றும் வெளிர்நீல நிறங்களிலும் வாக்குச் சீட்டு இருக்கும். ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குரிய வாக்குச்சீட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த வாக் குச்சீட்டுகள் அரசு அச்சகங்களில் ஏற்கெனவே அச்சிடப் பட்டு தேர்தலுக்கு தயார் நிலையில் வரவழைக்கப்பட் டுள்ளன. இது தவிர ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. எனவே தற்போது வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை, வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்ட நிலையில், அதற்குரிய வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி பல்லடம், உடுமலைபேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் உள்ள அச்சகங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,பல்லடம் அச்சகத்தில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட் டார். அத்துடன் உடுமலை, கரூரில் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.