திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கண்டனம்
திருப்பூர், செப். 6- திருப்பூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பின்னலாடை நிறுவனத்திற்குள் புகுந்து வன்முறை யில் ஈடுபட்ட இந்து முன்னணியின் வெறியாட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. திருப்பூர் அருகே அங்கேரி பாளை யத்தில் வியாழனன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர் கள் அத்துமீறி பின்னலாடை நிறுவ னத்திற்குள் உள்ளே புகுந்து வன்மு றையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 10க்கும் ஊழியர்கள் படு காயமடைந்துள்ளதுடன், நிறுவனத் திலுள்ள பொருட்கள் அடித்து நொறுக் கப்பட்டது. இந்நிலையில் இச்சம்ப வத்திற்கு திருப்பூர் எற்றுமதியாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க தலைவர்கள் ராஜா, சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாய் இருந்து வரும் தொழி லாளர்கள் ஒத்துழைப்பு மிகவும் போற் றுதலுக்கு உரியதாகும். இச்சூழலில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் தொழிற்சாலை உரிமையாளரிடம் இந்து முன்னணியினர் பணம் பறிக் கும் நோக்கத்தில் நடைபெற்ற நிகழ் வைக் கண்டிக்கின்றோம். மேலும் ஊர்வ லத்தின்போது பனியன் நிறுவனத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காவல்துறை துரிதமாக செயல் பட்டு வன்முறை நிகழ்த்திய நபர்களை உடனடியாகக் கண்டுபிடித்து தண் டனை கொடுக்க வேண்டும். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்ப வங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.