17வது மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இத்தொகுதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளிலும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் உஜியார்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அஜய்குமாரை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.