tamilnadu

img

வாகன பதிவெண் பலகை உள்நாட்டு தொழிலுக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முனைவதாக குற்றச்சாட்டு

கோவை, மே 4-கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாக வாகனங்களின் பதிவெண் பலகை (நம்பர் பிளேட்) விவகாரத்தில் உள்நாட்டு தொழிலுக்கு மூடுவிழா நடத்தமத்திய அரசு முனைவதாக விளம்பர பல்தொழில் தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர்கள் மன்றத்தில் சனியன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. விளம்பர பல்தொழில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகி ஹரிதரன் கூறுகையில், உயர் பாதுகாப்பு பதிவெண் பலகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தற்போது மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த உயர் பாதுகாப்பு பதிவெண் பலகையால் எந்த பலனும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. யஏழு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவே இதனை அவசர கோலத்தில் மத்தியஅரசு நடைமுறைப்படுத்த முனைகிறது. வாகனங்களுக்கு பதிவெண் பலகை அமைக்கும் பணியில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர். வாகன தயாரிப்பு நிறுவனங்களே இந்த பதிவெண் பலகை அமைத்துக்கொள்ளலாம் என்கிற உத்தரவினால் ஏழு கார்ப்ரேட்நிறுவனங்களுக்காக கோடிக்கணக்கனோர் பாதிக்கப்படும்அபாயம் உள்ளது. விளம்பர பல்தொழில்தயாரிப்பாளர்களை இந்த தொழிலைவிட்டே விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழகத்தில் சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனை மையத்திலேயே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பதிவெண் பலகையை பொருத்தி வருகிறார்கள். அரசு வழிகாட்டியுள்ள தரம்உள்ளிட்ட ஏதுவும் இந்த பலகையில்பின்பற்றப்படவில்லை. 

இதனால்மீண்டும் சர்ச்சைகளும், குளறுபடிகளும் தான் ஏற்படும். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தும். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின் படிதான் வாகன பதிவெண் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கும்போது மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் ஏன் அவசரப்படுகிறது? கடந்த டிசம்பர் 6ம் தேதி அவசரகதியில் அரசாணை பிறப்பிக்க காரணம் என்ன? ஒரு மாநிலத்திற்கு ஒரு முகவர் என்று தான் முதலில் மத்திய அரசு கூறியது. ஆனால் தற்போது ஒரு மாநிலத்திற்கு பல முகவர்களை நியமிக்க உள்ளனர். இதனால்வாகனம் மற்றும் அதன் உரிமையாளர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் எளிதாக வெளியே கசிய வாய்ப்புள்ளது. இந்த நம்பர் பிளேட்களில் எந்த டிஜிட்டல் சிப்களோ அல்லது பார் கோட்களோ இல்லை. மேலும் நம்பர் பிளேட்களின் விலை அதிகமாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் கூறும்தொகைக்கு தான் மக்கள் வாங்கவேண்டியிருக்கும் என தெரிவித்தனர். ஆகவே மத்திய அரசின் இந்தமுடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாதுஎன்று வலியுறுத்தி கோரிக்கை மனுவை அனுப்பவுள்ளோம். ஏற்கனவே இதுகுறித்து தமிழக போக்குவரத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இந்த பேட்டியின்போது சங்கநிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வாகனத்தில்பொருத்தப்பட்டுள்ள பதிவெண் பலகை தரமில்லாதது குறித்து செய்தியாளர்களிடம் செயல்முறை விளக்கம் அளித்தனர்.