tamilnadu

img

காவியக் கலைஞன் கலைவாணர் தமுஎகச இலக்கிய சந்திப்பில் இசைப்பேருரை

கோவை, நவ. 3–  தமுஎகச சார்பில் ஞாயிறன்று நடை பெற்ற இலக்கிய சந்திப்பில் காவியக் கலை ஞன் கலைவாணர் புகழ் குறித்து இசைப் பேருரை நிகழ்த்தப்பட்டது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 211 ஆவது மாதந்திர இலக்கிய சந்திப்பு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கவிஞர் ம.திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. டி.சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.  இந்நிகழச்சியில் குருவைத்தேடி நூல்  வெளியிடப்பட்டது. இந்நூலை தமுஎகச மாநில நிர்வாகி தி.மணி வெளியிட லலிதா மதுசூதனன், புலவர்.பூ.அ.இரவீந்திரன், என்.ஜான் ஆகியோர் பெற்றுக்கொண்ட னர். நூல்குறித்து இர.வெங்கடேசன் கருத்து ரையாற்றினார். நூலாசிரியர் ச.இராஜ கோபால் ஏற்புரையாற்றினார். முன்னதாக யாசகம் நாவல் குறித்து கவிஞர் அ.கரீம் அறிமுக உரையாற்றினார். நாவலாசிரியர் எம்.எம்.தீன் ஏற்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து காவியக்கலை ஞன் என்.எஸ்.கலைவாணர் குறித்து கவி ஞர் சோழ.நாகராஜன் இசைப்பேருரை நிகழ்த்தினார். இதில், என்எஸ்கே நாட கம் மற்றும் வெள்ளித்திரையில் தனது கதா பாத்திரத்தின் மூலம் பகுத்தறிவு கருத்துகள், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான தனது ஆவேசம், பாடல், நகைச்சுவையின் மூலம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து இசைப்பேருரை நிகழத்தினார். காலத்தால் அழியாத காவிய நாயகன் என்.எஸ்.கே குறித்த இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் இ.வெ.வீர மணி, தஞ்சை தமிழ்வாணன், புலவர்.இரா. பானுமதி ஆகியோரின் பாடல் கலைகள்  நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.