தருமபுரி, ஜூலை 4- குலக்கல்வியை கொண்டு வரு வதே மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையாக உள்ளதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றஞ்சாட்டி னார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மீதான சிறப்புக் கருத்தரங் கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தரு மபுரி சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் நாகை பாலு தலைமை வகித்தார். சுகந்தி பாஸ்கரன் வரவேற்றார். தமிழ் நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் இ.பி.பெருமாள் கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசினார். முற்போக்கு எழுத் தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் நவகவி கவிதை வாசித்தார். பொதுப்பள்ளிகளுக்கான மாநில பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந் திரபாபு, முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை பொது செயலாளர் எஸ்.கருணா ஆகியார் சிறப்புரை யாற்றினர். பொதுப்பள்ளிகளுக்கான மாநில பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசியதாவது, மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை 484 பக்க மாக வெளிட்டது இதை சுருக்கி 51பக் கங்களாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆங்கிலம், தமிழ் உள் ளிட்ட 12, மொழிகளில் வெளியிட் டுள்ளது. இந்தக் கல்வி கொள்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுத்தாலும், வேலை செய்யும் திறன், அறிவு கிடையாது. வேலை கொடுக்காததற்குக் கார ணம் திறமை இல்லை என குறிப்பிட் டுள்ளனர். உயர் சாதியில் உள்ளவர் கள் தான் பெரும்பகுதி அமைச்சரவை யில் உள்ளனர். பலதுறைகளில் அதிக அளவில் அதிகாரிகளாக உள்ளனர். சமுதாயத்திலும், கல்வியிலும் பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென்று 1852-ம் ஆண்டு ஜோதிராவ்பூலே போராடினார். குறிப்பாகப் பெண் கள் கல்வி கற்க வேண்டும் எனப் போரா டினார். சூத்திரர்களுக்கும், ஆதி சூத்திரர்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் கல்வி மறுக்கப்பட் டது. ஜோதிராவ் பூலே அவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு அரசுதான் கல்விகொடுக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் போராடி னார். தாழ்த்தப்பட்டவர்கள் அறிவி யலும், கணிதமும், உயர் கல்வியும் படிக்காமல் சமூகம் எப்படி முன்னேற முடியும் எனக் கேட்டவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய நாட்டில் நிலம், உணவு, உடை, நிலப்பரப்பு இவை அனைத்தும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
பலமாநிலத்தின் கூட்டு என்று சொல்லும் போது, மொழி எப்படி அனைவருக்கும் ஒன் றாக இருக்க முடியும். புதிய கல்விக்கொள்கையில் 3வயது தொடங்கி, 8வயது வரை அடிப்படை அறிவு,வாழ்வாதார திறன்களை மேம்படுத்த தொழிற்கல் வியைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் அளவில் என் னென்ன வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறதோ, அந்த தொழிலை கற்றுக் கொடுக்கவேண்டும். தோட் டகலை, மண்பாண்டம் செய்தல், தட்சர், மின்சார வேலை ஆகிய தொழிற்கல்வியைக் அனுபவரீதியா கவும் கற்றுகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கொள்கை அடிப்படையி லேயே கோளாறு உள்ளது. ஒரு குழந்தையை, குழந்தைக்கான பருவத்தை அனுபவிக்க விடாமல், வேறு வேலையை திணிக்கும் செய லைச் செய்கின்றனர். மேலும் குலக்கல் வியை ஊக்குவிக்கும் முறையைத்தான் புதிய கல்விகொள்கை சொல்கிறது. மாநில அரசின் கல்வி உரிமையை தேசிய கல்விக்கொள்கை பறிக்கிறது.கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, மாநில அர சிற்கு எதிரானது. எனவே புதிய கல் விக் கொள்கையின் பாதக அம்சங் களை மக்களுக்குக் கொண்டு சென்று, மத்திய அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கருத்தரங்கின் நிறைவாக கூத்தப்பாடி பழனி நன்றி கூறினார்.