tamilnadu

img

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

சேலம், செப்.8- எட்டாவது ஊதிய மாற்றத்தின் படி 21மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கு மாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சேலம் மாவட்ட 13ஆவது மாநாடு விஜயராகவாச்சாரியார் அரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சி.முருகப்பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட  துணைத்தலைவர் தெய்வ ஜோதி  அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். இணைச்செயலாளர் அர்த்தனாரி வரவேற்புரையாற்றினார். சங் கத்தின் மாநில துணைத் தலைவர்  பார்த்திபன் மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். மாவட்ட  செயலாளர் இ.கோவிந்தராஜ்,  மாவட்ட பொருளாளர் செல்வம்  ஆகியோர் அறிக்கை சமர்ப்பித் தனர்.  மாநாட்டில் தோழமை  சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை  வழங்கினர். 

இதில் ஜாக்டோ-ஜியோ  போராட்டத்தில் பங்கேற்றவர் களை கைது நடவடிக்கையாக 17பி மற்றும் தற்காலிக பணி நீக்கம்  உள்ளிட்ட ஊழியர் விரோத நடவ டிக்கைகளை தமிழக அரசு உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப் பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் மாற்றி  அனை வருக்கும் காலமுறை ஊதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை எண் 56ஐ  ரத்து செய்யவேண்டும். சாலைப் பணியாளர்களின் பணி நீக்க கால மான 41 மாதத்தினை பணிக் கால மாக அறிவிக்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர்களின் பணியிடத்தை குறித்து வெளியிடப்பட்ட அர சாணை 337 திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் சேலம்- சென்னை பசுமை  வழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.  பெண்  அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு விசாகா கமிட்டி  அமைக்கப்பட வேண்டும்.  ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நல விடுதியில் பணி யாற்றும் 81 விடுதி ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளாகியும் பணிவரன் முறை செய்யப்படாமல் இருப்ப தால் அவர்களுக்கு பணி வரை யறை செய்ய வேண்டும். சேலம் மாநகரில் உள்ள சாலைகள் மற்றும்  போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இடங்களை கண்டறிந்து சீர்படுத்த வேண்டும்.  சேலம்  உடையாப்பட்டி புறவழிச் சாலை யிலிருந்து சீலநாயக்கன்பட்டி புறவழிச் சாலை மற்றும் கொண்ட லம்பட்டி புறவழிச் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு கூடுதல் அரசுப்பேருந்து இயக்கப் பட வேண்டும் உள்ளிட்ட பல் வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. 

புதிய நிர்வாகிகள் தேர்வு

மாவட்ட தலைவராக சி.முருகப் பெருமாள், மாவட்ட செயலாள ராக பி.சுரேஷ், மாவட்ட பொருளாள ராக வி.செல்வம், மாவட்ட துணைத் தலைவர்களாக எம்.திருவரங்கன், எம்.ராணி, எ.சண்முகம், எம்.முத்துக் குமரன்,  மாவட்ட இணை செயலாள ராக எம்.ஜீவானந்தம், என்.திரு நாவுக்கரசு, என்.மாதவ வீரன், வி. அமராவதி உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.  முன்னதாக, மாநாட்டில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஓமலூர் வட்ட கிளை தலைவர் ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலாளர் செல்வம் ஆகி யோருக்கு பாராட்டு விழா நடை பெற்றது.  மாநாட்டில் புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி நிறைவுரையாற்றி னார். நிறைவாக மாவட்ட செய லாளர் சுரேஷ் நன்றி கூறினார்.