கோவை, அக். 1 – நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகு தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி களின் ஊழியர்களுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு நகரக்குழுவிற்குட்பட்ட பகுதியில் செவ்வாயன்று நன்றி அறிவிப்பு பிரச் சாரத்தை பி.ஆர்.நடராஜன் எம்.பி. மேற் கொண்டார். வடகோவை காமராஜபுரம் பகுதியில் துவங்கிய நன்றி அறிவிப்பு இயக்கம் சிவா னந்தாகாலனி, அண்ணாபுதுலைன், டாடா பாத், நுறடி சாலை, ராம்நகர், காட்டூர், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், ராமநாத புரம்,ஒலம்பஸ், மருதூர், திருவள்ளூவர் வீதி, கணேசபுரம், மசால் லே அவுட் உள் ளிட்ட பல்வேறு பகுதியில் பிரச்சாரம் மேற் கொண்டு புலியகுளம் பெரியார் சிலை முன்பு பிரச்சாரம் நிறைவடைந்தது. இப்பிரச்சார இயக்கத்தில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, திமுக நிர்வாகி ராஜேஷ்வரி, மதிமுக நிர்வாகிகள் லூயிஸ், குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர், ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குரு சாமி, காங்கிரஸ் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யு.கே.சிவ ஞானம், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் மற்றும் என்.செல்வராஜ், ஆர்.ராஜன், என்.முருகேசன் உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றனர். முன்னதாக இந்த நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் எம்பியிடம் பொது மக்கள் பல்வேறு தரப்பிலான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.