தாராபுரத்தில் பரவலாக மழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தாராபுரம், நவ 29 - தாராபுரத்தில் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை செய்து வரு கிறது. தாராபுரத்தில் கடந்த 3 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கட்டுமானத் தொழில், செங்கல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பகல் நேரங்க ளில் திடீரென மழை பெய்வதும், வெயில் அடிப்பது மாக உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள் சளி, காய்ச்சல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, தாராபுரம் என்சிபி பள்ளி, பைபாஸ் சாலை மற்றும் நகர்பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கிக் குண் டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய் யும் சமயங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் டிச.1-31 வரை மார்க்சிஸ்ட் கட்சி நிதி வசூல் இயக்கம்
திருப்பூர், நவ. 29 - திருப்பூர் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மாதங் களில் குறிப்பிட்ட நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய அனைத்து நகர, கிராமப்புறங்களிலும் வீடு, வீடாக மக்களைச் சந்தித்து வசூல் இயக்கம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் இயக்கத்தின் ஒரு பகுதியாக அவிநாசி ஒன்றியத் திற்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் திட்டமிட்ட காலத் துக்கு முன்பே தங்கள் பகுதியில் மக்களைச் சந்தித்து கட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் நடத்துவது என தீர்மானித்தன. அதன்படி, மூன்று நாட்கள் இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசூல் இயக்கம் நடத் தப்பட்டது. வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து நிதி வசூல் செய்யப்பட்டது. சாமானிய உழைப் பாளி மக்களுடன், அப்பகுதி சிறு தொழில் நடத்துவோர், வியாபாரி கள் என பலதரப்பினரும் மனமு வந்து தாராளமாக நிதி வழங்கினர். இந்த வசூல் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, இடைக்குழு உறுப்பினர் முருகன், ராமகிருஷ்ணன், குட்டி என்கிற மோகனசுந்தரம், வைஸ் பால சுப்பிரமணியம், குமரவேல் உள் பட பலர் பங்கேற்றனர். புதுப்பா ளையம் ஊராட்சி பகுதி கிளைக ளுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வசூலிப் பதென இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. எனினும் வசூல் இயக்கத் தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி ரூ.51 ஆயிரத்து 550 வசூ லானது. இந்த தொகையை கட்சி அணியினர் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜிடம் ஒப்படைத் தனர். தற்போது மத்திய, மாநில அரசு களின் மக்கள் விரோத கொள்கை களுக்கு எதிராக சமரசமின்றி தொடர்ந்து போராடி வரும் மார்க் சிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு பலப்பட்டுள்ளது. அத் துடன் கட்சி மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நிதி வசூல் இயக்கத் தில் சாமானிய மக்கள் முதல் சிறு, குறு தொழில் துறையினர், வர்த்த கர்கள், வியாபாரிகள் என பல தரப் பினரும் தங்கள் சொந்த நெருக்கடி களைத் தாண்டி இன்முகத்துடன் நிதி வழங்கினர். டிசம்பர் வசூல் இயக்கம் வெற்றிகரமாக நடை பெறும் என கட்டியம் கூறுவதாக புதுப்பாளையம் ஊராட்சி வசூல் இயக்கம் அமைந்திருந்தது என மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் கூறினார்.
சாலை விபத்தில் இருவர் பலி
உடுமலை, நவ. 29- உடுமலை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியாகினர். உடுமலை அருகே எரி சனம்பட்டி முதல் ஜிலேப் பிநாயக்கன்பாளையம் கிரா மத்திற்கு செல்லும் சாலை யில் வெள்ளியன்று இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் வாகனம் தீ பற்றி எரிந்தது. இவ்விபத் தில் வாகனத்தில் வந்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் வல் லக்குண்டாபுரத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவர்கள் உடலில் தீ பற்றி உயிரிழந் தனர். இதுகுறித்து தளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
அவிநாசி, நவ. 29- அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் வெள்ளி யன்று கட்டட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி பெரியாயி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் லோகநாதன்(24). கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா(22) என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் லோகநாதன் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில், லோகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தடையின்றி தொடரும் ஆன்லைன் லாட்டரி விற்பனை
பெருமாநல்லூர், நவ. 29- தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் குன்னத்தூர், பெருமாநல் லூர், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரளா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மறை முகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரும் புகாரை அடுத்து, போலீசார் அவ்வப் போது ஆய்வு செய்து, வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவிநாசி காவல் சரகத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சேவூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஆலத்தூர் அருகே செட்டிபுதூரில் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்று மற்றும் மூன்று நம்பர் முடிவுகளை அறிவித்து பரிசுத் தொகையை வழங்கி வருகின்றனர். இதில் ஒரு நம்பருக்கு ரூ.100, 2 நம்பருக்கு ரூ.1000, 3 நம்பருக்கு ஒரு லட்சம் ரூபாய் என வழங்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு மட்டுமே இப்பரிசுத் தொகை வழங்கப்படுகிறது, மீதியுள்ளவர்கள் பணத்தையும் இழந்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். இதற்காக கணினிகளுக்கு அடுத்தபடியாக தற்போது, சிறிய துண்டு சீட்டுகளை பொதுமக்களுக்கு வழங்கி, செல்லிடப் பேசி மூலமாகவே, அறிவிப்புகளை அறிந்து கொள்ளும் வகையில், ரகசியமாக இந்த தொழிலை நடத்தி வருகின்றனர். எனவே அப்பாவி ஏழை மக்களையும், கூலித் தொழிலாளர்களையும் ஏமாற்றும் விதமாக நடைபெறும் ஆன்லைன் லாட்டரி விற்பனையை கண்டறிந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.