tamilnadu

img

புலம் பெயர்ந்த தொழிலாளர் துயரம் களைய நடவடிக்கை எடுத்திடுக

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூர், மே 23 – புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க குளறுபடிகளைக் களைந்து  வெளிப்படையான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவல கத்தில் சனியன்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூரில்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடும் நெருக்கடியைச் சந் தித்து வரும் அவர்களைச் சொந்த ஊர்க ளுக்கு அனுப்பி வைக்க வெளிப்படை யான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  இங்கிருந்து அனுப்பி வைக்கும் தொழி லாளர்களை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். அந்த தொழிலாளர்கள் ஆன்லை னில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத் தப்பட்டனர். மாவட்ட ஆட்சியரகம், காவல் துறை மற்றும் உள்ளூர் மட்டத் தில் கிராம நிர்வாக அலுவலர் என பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் தங்கள்  பெயர்களை ஆதார் மற்றும் அலை பேசி எண்ணுடன் ஒன்றுக்கும் மேற் பட்ட முறை பதிவு செய்து வைத்துக் காத்திருக்கின்றனர். ஆனால்  அந்த  தொழிலாளர்களை சொந்த ஊர்க ளுக்கு ரயிலில் அனுப்பி வைக்கும் நடை முறை உரிய திட்டமிடல், முன்னேற்பா டுகள் இல்லாமல் பல்வேறு குளறுபடி களுடன் உள்ளது. இதனால் பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருக்கும் தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல முடியவில்லை.

ரயில் விடும் தகவல் அறிந்து கணிச மான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் நிலையம் நோக்கி வருவதும், காவல் துறையினர் அவர்களை விரட் டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளன. எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் கள் புறப்படும் என்ற கால அட்டவ ணையை முன்கூட்டியே அனைவருக் கும் தெரியும்படி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு தகவல் உதவி மையம் அமைத்து ரயில் பயண ஏற்பாட்டை முறைப்படுத்த வேண்டும். வேலையும், வருமானமும் இல்லா மல் ஊருக்குச் செல்ல தவித்து வரும் ஏழைத் தொழிலாளர்களிடம், சிலர் ரயி லில் இடம் பிடித்துத் தருவதாகச் சொல்லி ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த இழிசெயல் கண்டிக்கத்தக்கது. ஒரு பகுதி தொழிலாளர்கள் சொந்த  ஊருக்குச் செல்லும் நிலையில் பனி யன் நிறுவனங்கள் 50 சதவிகித தொழி லாளர்களுடன் இயங்கத் தொடங்கி யுள்ளன. எனவே தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை தொழிலா ளர்களுக்கு மட்டும் வேலை வழங்குவ தாகத் தெரிவித்து, மற்ற தொழிலாளர்க ளுக்கு வேலை மறுப்பதுடன் அவர்கள்  தங்க வைக்கப்பட்டிருக்கும் அறைக ளில் இருந்தும் காலி செய்து வெளியே றுமாறு தொழில் முனைவோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எனவே அவர்களது நிலை கேள்விக்கு றியாக உள்ளது.  எனவே இங்கு வேலையும் இல்லா மல், சொந்த ஊருக்கும் செல்ல வழியில் லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உணவு உள்ளிட்ட உதவி கள் கிடைப்பதை மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அவர்களுக்கு இங்கி ருக்கும் நாட்களுக்குத் தேவையான நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.

முழு சம்பளம் உறுதி செய்க!

தற்போது இயங்கும் ஒரு பகுதி தொழிற்சாலைகள் அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தில் 30 சதவி கிதம் வரை பிடித்தம் செய்து கொண்டு  70 சதவிகிதம் சம்பளம்தான் தருவோம்  என்று உரிமையாளர்கள் இன்றைய இக்கட்டான சூழ்நிலையைப் பயன்ப டுத்திக் கொண்டு, தன்னிச்சையாக முடிவெடுத்து அதை ஏற்கும்படி தொழி லாளர்களை நிர்பந்தம் செய்கின்றனர்.  எனவே பின்னலாடை நிறுவனங் கள் நெருக்கடியான நிலையில், தங்கள்  கோரிக்கைகள் குறித்து அரசிடம் முறையிடும் அதேசமயம், தொழிலா ளர்களன் சம்பளத்தை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் செய்யும்  வேலைக்கு நிர்ணயித்த முழுமையான சம்பளத்தை வழங்குவதை உத்தர வாதம் செய்ய வேண்டும்.

கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு நூற்றாண்டு போராட்டத்தின் விளைவாகப் பெறப் பட்ட தொழிலாளர்களின் 8 மணி நேரம் வேலைச் சட்டத்தை மத்திய மோடி  அரசு நீர்த்துப் போகச் செய்து, 12 மணி  நேர வேலை நேரமாகவும், மிகை நேர  வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் என்ப தையும் ரத்து செய்யவும் முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக  ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்தும், சட்ட  அமலாக்கத்துக்கு குறிப்பிட்ட காலம்  தடை விதித்தும் அரசியல் சட்டத்திற்கு  விரோதமாக நடந்து கொண்டிருக் கின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுச் சங்கம் (ஏஇபிசி) தலை வர் ஏ.சக்திவேல் தமிழகத்திலும் 12  மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை  வைத்திருக்கிறார். இக்கோரிக்கையை ஏற்க முடியாது. நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி தொழிலாளர்களை மேலும் கசக்கி பிழிய முயலும் இது  போன்ற பிற்போக்கான கோரிக்கை களை மத்திய, மாநில அரசுகள் நிராக ரிக்க வேண்டும்.’

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவ தால் அந்த நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உடனடியாக, எளிமையாகக் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வங்கிக ளில் பெற்ற தொழில் கடன்களுக்கு வட்டியை அரசே ஏற்க வேண்டும். அசல் கடன் தொகை வசூலிப்பதை ஓராண்டு காலத்துக்குத் தள்ளி வைக்க  வேண்டும். சி.சி. வங்கிக் கணக்கு  வைத்திருப்போருக்கு மட்டும்தான் தற் போது மத்திய அரசு அறிவித்திருக்கும் ரூ.3 லட்சம் கோடி சிறப்புத் திட்டத் தில், கூடுதல் கடன் தரப்படும் என நிபந் தனை விதித்துள்ளனர். அந்த கட்டுப் பாட்டைத் தளர்த்தி எல்லாவித வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து சிறு, குறு தொழில் நிறுவனத்திற்கும் கடன் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தொழில் நிறுவனங்க ளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவையை உடனடி யாக வழங்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி கொரோனா ஊரடங்கு காலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெ னவே கோவை மாவட்டத்தில் இழப் பீடு வழங்கியது போல் திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வரு கின்றனர். எனவே விவசாயிகள் கோரிக்கையை ஏற்பதுடன், அதுவரை  உயர்மின் கோபுரப் பணிகளை திருப் பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள் ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பி.ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டார்.  இந்த பேட்டியின்போது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.கா மராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் ஆகியோர் உடனிருந்த னர்.