tamilnadu

திருப்பூரிலிருந்து இதுவரை ஆறு ரயில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர் பயணம்

திருப்பூர், மே 17 - திருப்பூரில் இருந்து கடந்த ஒரு  வார காலத்தில் மட்டும் ஆறு ரயில் கள் மற்றும் பேருந்துகள் மூலம் 10  ஆயிரத்து 754 புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் சொந்த ஊருக்குப் அனுப் பிவைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா ஊரடங்கு அமலி லுள்ள நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் வேலை இல்லாமலும், வருமானம் இல்லாமலும், தங்கியிருக்கும் சிறிய  அறைகளுக்கு வாடகை தர முடியாம லும் கடும் நெருக்கடியைச் சந்தித்து  வந்தனர். வேலையின்றி இருக்கும்  தொழிலாளர்களுக்கு தொழிற்சா லைகள் ஊதியம் மற்றும் உணவு  வழங்க வேண்டும் என பிரதமரும்,  முதல்வரும் கேட்டுக் கொண்டனர்.  இருந்தபோதும் மிகப்பெரும்பா லான நிறுவனங்களின் உரிமையா ளர்கள் அவர்களை கண்டுகொள்ள வில்லை. ஒரு பகுதி தன்னார்வப்  பொது நல அமைப்புகள் மற்றும்  அரசியல் கட்சிகள் உதவி செய்தா லும் அவை போதுமானவையாக இருக்கவில்லை.

அரசு அறிவித்த நிவாரணமும் பல்வேறு குளறுபடிக ளுடன் குறைந்த அளவே இந்தத் தொழிலாளர்களுக்கு கிடைத்தது.  இந்நிலையில், தாங்கள் சந்திக் கும் நெருக்கடி நிலையை சமாளிக்க  சொந்த மாநிலங்களில் உள்ள பெற்றோர், உறவினர்கள் மற்றும்  நண்பர்களிடம் பணத்தை கட னாகப் பெற்று சமாளித்து வந்த னர். இத்தகைய சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு அடுத்த டுத்து மூன்று கட்டங்களை எட்டிய தால் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உளவி யல் சிக்கலுக்கும் ஆளானார்கள்.  எனவே தங்கள் சொந்த ஊர்க ளுக்குச் செல்ல வேண்டும் என்ற  தவிப்புக்கு ஆட்பட்டனர். இது குறித்து கோரிக்கை வலுத்து வந்த துடன் பல்வேறு அரசியல் தலைவர் களும் கூற, ஆங்காங்கே பல வடி வங்களில் போராட்டமும் தலை  தூக்கியது. இதையடுத்து மாவட்ட  நிர்வாகம் வெளி மாநிலம் செல்ல  விரும்பும் தொழிலாளர்கள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

இது தவிர ஆங்காங்கே போராடி யவர்களிடம் காவல் துறையினரும் வெளிமாநிலம் செல்ல விரும்பு வோர் பட்டியலை எழுதி வாங்கினர்.  இந்நிலையில், பலத்த நிர்ப்பந்தம் ஏற்பட்ட பிறகு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் செல்ல ரயில் விடப் பட்டது. முதலில் பீகார், அடுத்து ஒடிசா, உத்தரபிரதேசம், மீண்டும்  பீகார் என அடுத்தடுத்து நான்கு  ரயில்கள் கடந்த வாரம் இயக்கப்பட் டன. இதன் மூலம் சுமார் ஆறாயி ரம் பேர் தங்களது சொந்த மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதைத்தொடர்ந்து திருப் பூரில் இருந்து பீகார் மாநிலம் ஹாஜிப்பூருக்கு 1464 தொழிலா ளர்களுடன் ஆறாவது சிறப்பு ரயில் ஞாயிறன்று பு றப்பட்டுச் சென்றது. முன்னதாக சனியன்று புறப்பட்ட ரயிலில் 1464 தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர்.  

பெரும்பான்மையான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என  தவிப்புடன் காத்திருக்கும் நிலை யில், ரயிலில் அனுப்ப வேண்டிய தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்கள் தங்கியிருக்கும் இடங்க ளில் இருந்து பேருந்துகள் மூலம் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்து உடல் பரிசோதனை செய்து,  உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி  ரயிலில் ஏற்றி விடும் பணியை காவல் துறையும் மாவட்ட நிர்வா கமும் இணைந்து மேற்கொண்ட னர். இந்நிலையில் ரயிலில் அனுப் பும் தகவல் அறிந்து பல தொழிலா ளர்கள் தன்னிச்சையாக ரயில் நிலை யங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். எனினும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு ரயில் நிலையத்துக்கு வேறு யாரும்  வர முடியாதபடி தடுத்து வைத்துள்ள னர். மேலும் எப்படி விண்ணப்பித்து ரயிலில் பயணிப்பது என தெரியா மல் பல தொழிலாளர்கள் குழப்பம டைந்துள்ளனர்.

ஒருபுறம் ஆன் லைன் விண்ணப்பம், மறுபுறம் காவல் துறை கணக்கெடுப்பு, இன் னொருபுறம் வி.ஏ.ஓ மூலம் பதிவு செய்வது என செயல்படுவதால் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்ப டும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது தொழிற்சாலைகள் இயங் கத் தொடங்கிய நிலையில் ஒரு பகுதி தொழிலாளர்கள் ஊருக்குச் செல்லாமல் இங்கேயே தங்கி இருக்கவும் முடிவு செய்துவிட்டனர்.  முதலில் சுமார் 25 ஆயிரம் பேர்  சொந்த ஊர் செல்ல பதிவு செய்திருப் பதாகக் கூறப்பட்டது. ஆனால்  ஞாயிறு வரை சுமார் 10 ஆயிரம்  தொழிலாளர்கள் அனுப்பப்பட்டுள் ளனர். இன்னும் எத்தனை ரயில்கள் இயக்கப்படும், எத்தனை பேர் ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என் பதும் தெளிவாக அறிவிக்கப்பட வில்லை.  

இதுகுறித்து சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் கூறுகை யில், இந்த இக்கட்டான சூழலில் கூட தாங்கள் வேலை செய்து வந்த  கம்பெனி உரிமையாளர்கள் தங் களை இதுவரை கண்டுகொள்ள வில்லை எனவும், தற்போது வரை தங்களை வந்து பார்க்கக்கூட இல்லை எனவும் தொழிலாளர்கள் வேதனையைப் பகிர்ந்து கொண்டு புறப்பட்டனர்.  ஆறு ரயில்களில் சுமார் 9  ஆயிரம் தொழிலாளர்கள் புறப்பட் டுச் சென்ற நிலையில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சில தொழி லாளர்கள் இங்கிருந்து பேருந்து கள் மூலம் சென்னைக்கு அனுப்பப் பட்டு அங்கிருந்து ரயில்களில் அனுப்பப்பட்டனர். இதுதவிர தனி யாகவும் சிலர் பேருந்துகளை வாட கைக்கு அமர்த்தி தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென் றுள்ளனர். திருப்பூரில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 754 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.