கோவை, ஜன. 6 – கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட் சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களாக தேர்ந்தெ டுக்கப்பட்ட 17 பேர் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமா ணம் எடுத்துக் கொண்டனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த டிச 27 மற்றும் 30 ஆம் தேதி களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடை பெற்றது. இதன் வாக்குகள் கடந்த ஜன 2 ஆம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கோவை மாவட்டத் தில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 228 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 2034 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 2434 பேர் புதியதாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி திங்களன்று பரவலாக நடைபெற்றது. முன்னதாக மாவட்ட கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப் பட்ட 17 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண் டனர். அதிமுக உறுப்பினர்கள் 10 பேரும், திமுக 5, பா.ஜ.க 2 என 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவி யேற்றனர். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கூட்டு றவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிச்சாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
உதகை
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைப்பெற்றது. இதில் 1 ஆவது வார் டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எம்.எம்.அனீபா மாஸ்டருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கெட்சி லீமா அமாலினி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்பின்னர் 2 வது வார்டில் திமுகவின் பொன்தோஸ், 3வது வார்டில் அதிமு கவின் சசிகலா, 4 வது வார்டில் திமுகவின் ரா.வனஜா, 5 வது வார்டில் திமுகவின் ராஜன், 6 வது வார்டில் திமுக வின் மீனா ஆகியோர் பதிவியேற்றனர்.