மாதத்தின் அனைத்து நாட்களும் வேலைக்கு சென்று சம்பளம் வாங்கி யவர்களே இக்கொரோனா ஊரங் கில் கடுமையாக பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி தத்தளித்து வரு கின்றனர். இத்தகைய சூழலில் வரு டத்தின் குறிப்பிட்ட சீசன்களை மட் டுமே நம்பி வாழும் திருமண மண்டபம் அலங்கரிப்பாளர்கள், சீசன் சமையல் காரர்கள், புகைப்படவியலாளர்கள், மைக்செட் கட்டுவோர், திருமண ஒருங்கிணைப்பாளர் போன்றோர் தற்சமயம் தங்கள் தொழிலையே மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளதாக வேதனை தெரிவிக் விக்கின்றனர். இவர்கள் இக்கொ ரோனா காலத்தை எவ்வாறு எதிர் கொண்டு வருகின்றனர் என கேட்ட போது,
சுப, துக்க நிகழ்ச்சிகளில் பந்தல் போட்டு சாமியானா வேலை செய் யும் தொழிலை நடத்தி வரும் சதீஷ்கு மார் என்பவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக சாமியானா தொழில் செய்து வருகிறேன். இதற்கு முன் ஒரு மாதத்திற்கு 25 - 30 ஆயி ரம் ரூபாய் வரை வருமானம் பார்த்து வந்தேன். எங்களைப் பொருத்த வரை மாத வருமானம் என்பது அந்த மாதத்தில் எங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களே. ஆக ஆர்டரைப் பொறுத்துதான் எங்களுக்கு வருமா னம். ஆனால், கொரோனா ஊரடங் கால் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்ட தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட் டுள்ளோம். பழைய நிலை மீண்டும் திரும்ப எப்படியும் ஒரு வருடம் வரை ஆகுமென்பதால் தற்போது சிறு, சிறு ஆர்டர்களை தேடிப்பிடித்து தொழில் செய்து வருகிறோம். அதுவும் கை விடப்பட்டால் வேறு வேலையை தேடிச் செல்வதைத் தவிர எங்க ளுக்கு வேறு வழியில்லை. எனக்கு ஏற்பட்ட பொருளாதார அடியால் என் னிடம் பணிபுரியும் சில பேருக்கும் என் னால் சரியாக உதவ முடியவில்லை. எனவே, இந்த நெருக்கடியான காலத் தில் என்ன செய்வதென்றே தெரி யாமல் உள்ளோம் என்கிறார்.
பல குடும்பங்கள் நிற்கதியாய்...
30 வருடங்களாக திருமண அலங் கார வேலையை மேற்கொண்டு வரும் கிருஷ்ணசாமி என்பவர் கூறுகை யில், திருமணத்திற்கு தேவையான மைக்செட்டுகள், அலங்கார வேலை கள் ஆகியவற்றை செய்து வருகி றேன். எனக்குக் கீழ் 3 பேர் பணிபுரி கின்றனர். அவர்களுக்கு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வீதம் மூன்று மாதம் வேலையில்லாக் காலத்தில் சம்பளம் கொடுத்தேன். தற்போதைய சூழ்நி லையைப் பொறுத்த வரை வேலை செய்பவர்களைக் காட்டிலும் எங்க ளைப்போல் வேலை கொடுப்பவர் கள் தான் இத்தொழிலில் அதிக நெருக் கடிக்குள்ளாகி உள்ளோம். கடை வாடகை, வாட்ச்மேன், மின் விநியோ கம், தண்ணீர் செலவு என இதற்கே அதிக செலவு பிடிக்கிறது. இம்மாதி யான ஊரடங்கு என் அனுபவத்தில் இதுவே முதன் முறையாகும். மேலும், ஒரு கல்யாணத்தை நம் பித்தான் சமையல்காரர்கள், துணிக் காரர்கள், காய்கறி மற்றும் மளிகை மொத்த விற்பனையாளர்கள் என பல தரப்பட்டோர் உள்ளனர். ஆக கல்யா ணத்தைப் பொறுத்தவரை ஒரு குடும் பத்திற்கு இருமணம் இணையும் தரு ணமாக கவனிக்கப்பட்டாலும், உண் மையில் அது பல குடும்பங்களை வாழ வைக்கும் நிகழ்வாகும். ஆனால், தற் சமயம் பல ஆயிரம் குடும்பங்கள் நிற்க தியாய் ஆதரவின்றி கிடக்கின்றோம். தற்போது அரசாங்க உதவி என்று எங்கள் தொழிலுக்கு தனியாக ஒன் றெல்லாம் இல்லை. எனவே, எங்கள் பிழைப்பை மற்ற நாட்களைப்போல் இந்நெருக்கடி காலகட்டத்திலும் நாங்கள் தான் செய்து வருகிறோம் என்கிறார்.
கைவிரிக்கும் வங்கிகள்…
திருமண அலங்கரிப்பாளர் பணியை கடந்த 12 வருடங்களாக செய்து வரும் அருள் ஆனந்த் என் பவர் கூறுகையில், என் தனிப்பட்ட சேமிப்பில் இருந்து மட்டுமே என் குடும்பத்திற்கும் என்னிடம் பணிபு ரியும் 13 பேரின் குடும்பத்தையும் பார்த்து வந்தோம். தற்போது, குடோன் மற்றும் வீட்டு வாடகை கொடுக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். ஒரு வாய் வார்த்தைக் காகத்தான் வீட்டு வாடகை எல்லாம் சில மாதங்கள் வசூலிக்க வேண்டாம் என அரசால் சொல்லப்பட்டதே தவிர நடைமுறையில் எல்லாம் அது சாத்தி யமாகவில்லை. வாடகை வாங்கித் தான் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்னும் நிலையெல்லாம் பல வீட்டு உரிமையாளர்களுக்கு இல் லாமல் இருந்தாலும், கறாராக வீட்டு வாடகை வசூலித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மேலும், ஏற்கனவே மேடை அலங் கார ஆர்டருக்காக வாங்கிய முன்ப ணத்தையும் திருப்பி கொடுக்க வேண் டியுள்ளதால் மிகவும் சிரமப்பட்டுள் ளோம். வங்கிகளுக்கு கடனுக்காக செல்லும்போது பெரும்பாலும் எங்க ளுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு கடனும் வழங்கப்படுவதில்லை. அர சால் கடனுதவித் திட்டங்கள் அதி களவில் அறிமுகப்படுத்தப் பட்டா லும் உண்மையில் இது தேவையா னவர்களுக்கு கிடைப்பதில்லை. யாருக்கு என்ன தர வேண்டும் என் பதை வங்கிகள் தான் தீர்மானிக் கின்றன. இவ்வாறு இருக்க இளைஞர் களின் கனவுகளுக்கு கடன்களால் வடிவம் கொடுப்போம் என சொல்லப் படுவதெல்லாம் வெறும் வெற்றுச் பேச்சுதான் என்கிறார் வேதனை யோடு.
அரசின் தோல்வி...
28 வருடங்களாக புகைப்பட கலைஞராக இருக்கும் இனாசு என்ப வர் கூறுகையில், இந்த 2 மாதங்கள் இல்லை, கடந்த 2 வருடங்களாகவே பணியில் சுணக்கம் தான். தற்போது பல இளைஞர்கள் பழைய டெக் னாலஜியையே புதிது புதிதாக உரு மாற்றி வருவதால் எங்களைப்போல் பழைய ஆட்களுக்கு வாய்ப்பு கிடைக் கிறது குறைவு தான். இருப்பினும் ஒரு மாதத்திற்கு கிடைக்கும் 2,3 திருமண ஆர்டர்கள் தான் எங்களுக்கு வரும். ஒரு சில மாதம் அதுவும் இருக்காது. இந்த கொரோனா ஊரடங்கால் அது வும் இல்லாமல் போனது. மத்திய அர சைப் பொறுத்தவரை ரூ.20 லட்சம் கோடிக்கான கடனுதவி அறிவித்தி ருப்பது என்பது கண்துடைப்பே. எங்க ளைப் போன்றோர் வங்கிக்குச் சென்று லோன் வாங்குவதற்கு ஆயி ரம் அலுவலக முறைகளையும், லட்சம் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுவரை அரசு அறிவித்திருக்கும் திட்டங்களில் புகைப்படக் கலை ஞர்களுக்கு என ஒரு சிறு நிவாரண மும் இல்லை. அதோடு கடனுதவித் திட்டங்களையும் நாங்கள் நேரடி யாகப் பெறும் வகையிலும் அரசு வடி வமைக்கவில்லை. அனைத்துத் திட் டங்களும் நேரடியாக மக்களைச் சென்றடையும் வகையிலும் இல்லை என்பதும் மறுக்க முடியாது. எனவே, மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து மக்களுக்கான சரியான திட்டங்களையும், அறிவிப்புகளை யும் முன்னெடுப்பதில் உண்மையில் தோற்றுப் போய் தான் உள்ளன. இவ் வாறு அவர் கூறினார்.
ஏமாற்றமே மிச்சம்..
கோவை மாவட்ட வீடியோ மற் றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் சர்புதீன் கூறுகையில், எங்கள் சங்கத்தில் 1,500 புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் உறுப்பினர்களாக உள் ளனர். பொதுவாக ஒரு வருடத்திற்கு மொத்தமாக 40 நாட்கள் மட்டுமே திரு மணம் போன்ற சுப காரியங்கள் மற் றும் அரசியல் நிகழ்வுகள் ஆகியவற் றால் வேலை கிடைக்கும். அந்த 40 வேலை நாட்களை நம்பித்தான் வரு டத்தின் மொத்த நாட்களுக்காக செல வினை ஒரு புகைப்படவியலாளர் சமா ளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வைகாசி (ஆங்கில மே மாதம்) மாதத் தில் தான் அதிக முகூர்த்த நாட்கள் வரும். தற்போதைய ஊரடங்கால் அதுவும் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து கலைஞர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள் ளோம். இதில் மிகவும் வருத்தமளிக் கும் செய்தி என்னவெனில் புகைப்ப டவியலாளர் மற்றும் வீடியோ எடுப் போருக்கான எந்த உதவியையோ நிவாரணத்தையோ அரசு அறிவிக்க வில்லை. அரசு புது புது அறிவிப்பை ஒவ்வொரு முறை வெளியிடும்போது எங்களைப்போன்ற புகைப்படவிய லாளர் எதிர்பார்த்து ஏமாந்து போகி றோம். சென்னையை தவிர்த்து தமிழ கத்தில் கிட்டதட்ட இரண்டரை லட் சம் பேரின் குடும்பங்கள் இத்தொ ழிலை நம்பியுள்ளன. சமீபத்தில் கும்ப கோணம் மற்றும் சென்னை யைச் சேர்ந்த இரு புகைப்படவியலா ளர்களின் தற்கொலை எங்கள் மத்தி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கு அரசு உகந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். குறைந் தது 100-200 பேர் வரை மண்டபங்க ளில் சுப நிகழ்ச்சிகளை நடத்த அனு மதி அளிக்க வேண்டும். மேலும் அரசு எங்களுக்கு குறிப்பிட்ட தொகை யினை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் குறைந்தபட்ச கோரிக்கையாகும் என் கிறார். அண்மையில் அரசால் அறிவிக் கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வா னது திருமணங்களை ஓரளவு சாத்தி யப்படுத்தியதே தவிர, இவர்களை போன்றோருக்கான வாழ்வாதார உறுதிபடுத்துதலை இன்னும் சாத்திய மாக்கவில்லை என்பதே நிதர்சணம்.
-ச.காவியா