பொள்ளாச்சி, ஜூலை 30- புதிய கல்விக் கொள்கை 2020ஐ ரத்து செய்யக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மத்திய அரசு முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கைக்கு பெரும் பாலான கல்வியாளர்கள், அறிஞர் கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தி ருந்தன. மேலும் பல்வேறு மாநில அர சுகளும் இதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை நடைமுறைப் படுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள் ளது. மத்திய அரசின் இந்நடவ டிக்கையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் கண்டன இயக்கத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, கோவை பொள்ளாச்சி தாலுகாவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தாலுகா செய லாளர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தினேஷ், துணைச் செயலாளர் சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.