பாஜக - வின் மாநிலத் துணைத்தலைவரான கனக சபாபதியை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சின்டி கேட் உறுப்பினராக நியமித்ததைக் கண்டித்து புத னன்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் மனு அளித் தனர். இதனை சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசா ருதீன், செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட நிர்வாகி கள் அளித்தனர்.