tamilnadu

img

அரசு பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து மாணவன் காயம்

கோவை, டிச. 17–  கோவையில் அரசு பள் ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் மாணவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் அரசு  துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. திங்களன்று இப் பள்ளியின் சுற்றுச்சுவர் தீடீரென இடிந்து விழுந்த தில் மாணவர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனை யடுத்து உடனடியாக மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவ லறிந்து வந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளி சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது குறித்தும், பள்ளி சுவர் விரிசல் ஏற்பட காரணமான மரத்தை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேநேரம், இந்த சுற்றுசுவர் கட்டப்பட்டு ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. ஆகவே, இவை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.