கோவை, ஆக.18 - மாற்றுத்திறனாளி மாணவரை சேர்க்க அரசு பள்ளி நிர்வாகம் மறுப்பது தொடர்பாக, இந்திய மாண வர் சங்கத்தினர் தலையிட்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மாணவன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மாணவர் சின்னதுரை. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்ற அவர் கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப் பில் சேர மாணவர் முயன்றுள்ளார். அப் போது, அவர் மாற்றுத்திறனாளி என்ற கார ணத்தைக் கூறி சேர்க்க மறுத்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் சேர்ந்து கொள்ளுமாறு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட நிர் வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.
இம்மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் துறை அதிகாரி ராமதுரை முருகன், சம்மந்தப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர் அவர் கேட்கும் பள்ளி யிலேயே படிக்க ஆவணம் செய்தார். மேலும், கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை முதன்மை அலுவலருக்கு தகவல் அளித்து உடனடியாக மாணவரை பள்ளி யில் சேர்க்க உத்தரவிட்டார். இதனைய டுத்து பள்ளிக்கு வரவழைக்கப்பட்ட மாண வன் உடனடியாக பள்ளியில் சேர்க்கப் பட்டார்.