tamilnadu

img

கல்குவாரி அமைவதை தடுத்து நிறுத்துக: மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 17- விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் கல்குவாரி அமைவதைத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தி னர் கோவை மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்.  மேட்டுபாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் முடுதுறை கிராமத்தில் 435 கல் குவாரிகள் அமைக்க அனுமதி கோரி விண் ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள் ளது. இப்பகுதிகளில், ஏற்கனவே கல்குவாரிகள் இயங்கி வரும் கார ணத்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. குடி யிருப்பு பகுதிகளில் கல்குவாரிகள் இயங்குவதால் வீடுகளில் விரி சல் ஏற்படுகிறது. கால்நடைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் கல்குவாரி களுக்கு அனுமதி அளிக்கும் பட் சத்தில், விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் சூழல் ஏற்படும். மேற்படி கிராமத்தில் குடியிருப்பு அதிகமாகி வரும்நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற் படும் என்பதால் கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக்கூ டாது என அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.  இதேபோல நாட்டு மாடு மேய்ச்சலுக்குப் பட்டி பாஸ் வழங்கி, அதனை அழிவில் இருந்து காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கால்நடை விவசாயிகள் மனு அளித்தனர்.  இம்மனுவில்   மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர், வடசித்தூர், குப்பனூர் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில், நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி மறுத்த காரணத்தால், நாட்டு மாட்டு இனம் அழிவை நோக்கிச் செல்கிறது. உணவின்றி தவித்த மாடுகளை விவசாயிகள் அறுவைக்கு விற்று விட்டனர். மேலும், நாட்டு மாடுகள் மேய்ப்ப தால் வனத்தின் வளம் பெறும் என்ற நிலை உள்ளது. நாட்டு மாட் டுப்பாலில் அதிக புரதச் சத்துகள் உள்ளன.  இந்நிலையில், வனப்பகுதி களை ஒட்டி கேளிக்கை விடுதி கள், ஆசிரமங்கள் மற்றும் குடியி ருப்புகள் அதிகரித்து உள்ளதே, மாடுகள் மேய்ச்சலுக்கு வனத் துறை அனுமதி மறுக்கக் காரண மாகும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளுக்குப் பட்டி பாஸ் வழங்கி மேய்ச்சலுக்கு அனுமதி அளித்து, நாட்டு மாடு களை அதன் இன அழிப்பில் இருந்து காப்பாற்றிட மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்தை சீர்படுத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் சிவானந்தபுரம் கிளையின் சார் பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், சிவானந்தபுரம் பகுதியில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மூன்று மணிநேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந் தது. இந்நிலையில் தற்போது  ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இத னால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தி நான்கு நாட்களுக்கு ஒருமுறை இரண்டு மணி நேரம் என்பதை உறுதி செய்ய வேண் டும்.  இதேபோல சக்தி சாலையில் புரேசன் மால் என்கிற மிகப்பெரிய வணிக வளாகம் அமைக்கப்பட் டுள்ளதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகி யுள்ளது. ஆகவே இச்சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத் துக் காவலரை இப்பகுதியில் நிய மித்தும், தடுப்பு அமைத்தும் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

நீதிமன்ற உத்தரவுப்படி நிவாரணம்
திராவிடர் விடுதலை கழக நிர் வாகி பாரூக்  என்பவர் இஸ்லா மிய மத அடிப்படைவாதிகளால் 2017 மார்ச் 16 வெட்டிகொலை செய்யப்பட்டார்.  இவ்வழக்கின் விசாரனை கோவை நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறந்த பரூக்கின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என பரூக்கின் குடும்பத்தினர் கோரியிருந்தனர். இதனையேற்று கடந்த சில தினங்களுக்குமுன்பு கோவை மாவட்ட நீதிபதி சக்தி வேல் இறந்த பரூக்கின் குடும்பத் தினருக்கு நிவாரணத் தொகையை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.  இதில் ஓரு லட்ச ரூபாய் குழந் தைகள் இருவர் பெயரில் வங்கி கணக்கிலும், மனைவி மற்றும் பெற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் இக்குடும்பத்திற்கு தற்போதுவரை அந்த நிவாரண தொகை கிடைக்க பெறவில்லை. ஆகவே உடனடி யாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சட்டப்பணிகள் ஆணையத்தலைவரின் உத்தர வுப்படி இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.