கோவை, ஜூலை 2- விஷவாயு தாக்கி மூவர் உயி ரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தனர். கோவையை அடுத்து கோவில் பாளையம் கோவில்மேடு பகுதி யில் பன்றி பண்ணையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய் யச்சென்ற தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த ராஜப்பன், வேடி யப்பன் மற்றொருவரான வேடியப் பன் ஆகியோர் கடந்த 26ம் தேதி விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுதொடர்பாக கையால் மலம் அள்ளும் தடைச் சட்டம் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவார ணம் மற்றும் அரசுப் பணி வழங் கிட நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஊரக உள்ளாட்சித்துறை சங்க பொதுச்செயலாளர்கே.ரத்தின குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
வாலிபர் சங்கம் மனு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சூலூர் தாலுகா செய லாளர் வி.பாலகிருஷ்ணன், வஞ்சி புரம் எம்.ஆனந்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, கோவை, சூலூர் தாலுகா பகு தியில் சின்னபுத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் கல்வி பயிலவும், பணி யிடங்களுக்குச் செல்லவும் பொது போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நம்பியே உள்ளனர். இந்நிலையில் பல்ல டம் முதல் உடுமலை சாலை வழி யாக செல்லும் பேருந்துகள் சின் னப்புத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக எந்த பேருந்துகளும் நிற்பது இல்லை. இதனால் கல்வி உள்ளிட்ட அனைத்து வாழ்வாதரங்களும் பாதிக்கப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதேபோல சூலூர் தாலுகா விற்குட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வஞ்சிபுரம், சின்னமாநாயக்கன் ்பாளையம், வலசுபாலையம், சேத் தம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுவதில்லை. இதனால் இந்த ஊராட்சிக்குட்பட்ட ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். எனவே பிரசவம் போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனையையே நாட வேண்டியுள்ளது. மேலும் எப்போதும் பூட்டிய நிலையி லேயே இந்த சுகாதார மையம் உள்ளது. கட்டிடங்கள் பாழாவ தோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஆகவே ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆரம்ப சுகாதரா நிலையம் பழையபடி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்