தருமபுரி, ஜூலை 11- சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளன மாநில மாநாட்டை யொட்டி தருமபுரியில் தோழர் கே.எம்.ஹரிபட் நினைவு ஜோதி பயண பிரச்சார கூட்டம் நடை பெற்றது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளன 14 வது மாநில மாநாடு ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. போக்குவ ரத்து கழக தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தவும், போராடிபெற்ற உரிமைகளை பாதுகாக்கவும் சிஐடியு எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள் ளது. இப்பட்டிபட்ட போராட் டங்களை முன்னின்று நடத்திய தலைவர்களில் தோழர் கே.எம்.ஹரிபட் முதன்மையானவர். ஓட்டல் தொழிலாளியாக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் ஓட்டல் தொழிலாளர் களுக்கு என தனிசங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்தவர் தோழர் கே.எம்.ஹரிபட். இதன்பின் சென்னை யில் பல கம்பெனிகளில் தொழிற் சங்கம் அமைத்து தொழிலாளர்க ளுக்காக போராடினார். மேலும் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத் தில் தொழிற் சங்க பணியாற்றி சிஐடியு சங்கத்தை கட்டமைத்து, பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வெற்றி கண்டு தமிழக தொழிற்சங் கத்தில் முத்திரை பதித்தவர் தோழர் கே.எம்.ஹரிபட். இந்நிலையில் திருநெல் வேலியில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 14 வது மாநில மாநாட்டையொட்டி தோழர் கே.எம்.ஹரிபட் நினைவை போற்றும் வகையில் நினைவுஜோதி பயண பிரச்சார கூட்டம் தருமபுரி நகர் பணி மனை முன்பு நடைபெற்றது. இப்பிரச்சார கூட்டத்திற்கு கிளை செயலாளர் ஆர்.சீனி வாசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.முரளி, நிர்வாகிகள் ஜே.முருகன், எஸ்.சிவராஜ், யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அதியமாண்கோட்டை கிளை பணிமனை முன்பும் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.