tamilnadu

img

மழை வெள்ளத்தில் மிதக்கும் எஸ்பி அலுவலகம்

கோவை, அக்.19- மழை நீர் தேங்கிய குட்டையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சிக்கியிருப்பதால் பொதுமக்கள் மட்டுமல்லாது காவலர்களே அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  கோவையில் வெள்ளியன்று இரவு பெய்த மழையில் பல்வேறு இடங்களில் சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் மற்றும் அரசு ஊழியர் சங்க அலுவலகங்கள், கூட்டரங்கம் உள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த வழியை ஒரு பொருட்டாகவே ஆட்சியாளர்கள் கருதுவதில்லை. கனமழையால் இந்த வழி குளம் குட்டை போல் உள்ளது. எவரும் செல்ல முடியாத நிலை ஏற்படும். அரசு அதிகாரிகள் பலர் அவசரத்திற்கு ரயில் நிலையம் செல்லுவதற்கு இவ்வழியே பயன்படுத்துகின்றனர். அன்றாடம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து செல்கிறார். இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் கூறுகையில், இந்த வழி சிறு மழைக்கே குளமாக மாறிவிடுகிறது. பல ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பாதையை சரி செய்ய வேண்டும். சாலை அமைக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரி களிடம் தெரிவித்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. குடியிருப்புகளில் மழை நீர் தேங்கினால் அபராதம் விதிப்பதில் தீவிரம் காட்டும் கோவை மாநகராட்சி, எந்நாளும் குளம் போல் தேங்கியுள்ள இப்பகுதியில் உள்ள நீரை அகற்ற சிறிதளவும் அக்கறை காட்டுவதில்லை. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கம் முன்பு மழை நீரை தேங்கியுள்ளதால் அபராதம் விதிக்க வாவது இந்த பக்கம் கோவை மாநகராட்சி அதிகாரிகள் வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம் என ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.