tamilnadu

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவை, செப்.3- பள்ளி மாணவிகள் மூன்று பேரை பாலியல் வன் கொடுமை செய்ததாக கோவை சுண்டப்பாளையத்தை சேர்ந்த 72  வயது முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  கோவை மாவட்டம், சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன் ஸ்டாப் சென்டர் என்ற பெண்களுக்கான சேவை மையம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முடிவடைந்த பிறகு இம்மையத்தின் நிர்வாகிகளிடம் அப்பள்ளி மாணவிகள் மூன்று பேர், அதே பகுதியை சார்ந்த முதியவர் ஒருவர் தங்களை பாலி யல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக புகார் தெரி வித்துள்ளனர்.  இதனையடுத்து ஒன் ஸ்டாப் சேவை மைய அதி காரிகள் கொடுத்த புகாரின் பேரில், பெருமாள் சாமி (72) என்பவர் மீது பேரூர் மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பெருமாள் சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தனர். கோவையில் குழந்தைகள் மீதான பாலியல் துன் புறுத்தல் நடவடிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற ஒரு புகாரின் பேரில் மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.