கோவை, ஆக. 6 - சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன் புறுத்தலில் ஈடுபட்ட இருவரை துடியலூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (23). தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், இவரும் இவரது நண்பருமான சதீஷும் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து நிலை யில், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடி யலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், குற்ற வாளியான சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரை யும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.