நாமக்கல், ஆக.9- ராசிபுரம் வட்டம், சந்திர சேகரபுரம் பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கு மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் சந்திரசேகரபுரம் எம்ஜிஆர் சிலை அருகில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசால் புதி தாக மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக் கப்பட்டது. ராசிபுரம் புறவழிச்சாலை இருந்து பாச்சல் வரை செல்லும் தெற்குப் பட்டி சாலை சந்திப்பு பகுதி உள்ளது. சந்திரசேகரபுரம், முருங்கபட்டி, பாச்சல் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தினசரி கடந்து செல்லும் பிரதான சாலை சந்திப்பாக உள்ளது.
இந்த புறவழிச் சாலையையொட்டி தெற்குப்பட்டி, அண்ணாநகர், அணைபாளையம், தட்டாங் குட்டை, களரம்பட்டி, நேருநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரு கின்றனர். இந்த புறவழிச் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இத னால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி புறவழிச்சாலையை கடக்க முயன்ற வெள்ளச்சி (எ) கமலா (65) என்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து அதி காரிகளுக்கு பலமுறை தடுக்க வலியு றுத்தி மனு அளித்தனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெற்குப் பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் புறவழிச் சாலையில் மேம் பாலம் அமைத்து கனரக வாகனங்கள் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத் தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேம்புசேகர், திமுக மாவட்ட பிரதிநிதி ரவி, காங்கிரஸ் வட்டார தலைவர் பெருமாள், சந்திர சேகரபுரம் முன்னாள் வார்டு உறுப்பி னர்கள் முருகேசன், நடராஜ் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.