கோவை, ஜன. 5 – பாலியல் வன்முறையை தடுக்க உதவும் வகையில் தற்காப்புப் பயிற்சி மையம் சூலூரில் ஞாயிறன்று துவங்கப்பட் டது. கோவை, சூலூரில் தற்காப்பினை அனைத்து இடங்களிலும் உறுதி செய்யும் வகையில் ரெட் ஆர்ம் சிலம்பம் அகடாமி என்கிற பெயரில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான சிலம்பம், வாள் சண்டை, மான் கொம்புப் பயிற்சி, சுருள்வாள், நூன்சாக், கூட்டுக் கை யாளுதல், மூச்சுப் பயிற்சி, தற்காப்பு நுணுக் கங்கள், கத்தி தற்காப்பு மற்றும் பெண்கள் தற்காப்பு ஆகிய பயிற்சிகள் அனைத்து வயதோருக்கும் அளிக்கும் வகையில் இம்மையம் துவக்கப்பட்டுள்ளது.சூலூர் உழவர் சந்தை பின்புறமுள்ள கேபிஜி கார்டன், கேபிஜி நகரில் இம்மையம் செயல் பட உள்ளது. இங்கு சர்வதேச கராத்தேப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சஞ்சய் பிரதாப் மற்றும் மாநில அளவில் பதக்கம் வென்ற திவ்ய பாரதி ஆகியோரால் பயிற்சியளிக்கப் படுகிறது. மேலும் பெண்களுக்கென பிரத்யேகமாக தற்காப்பு நுட்பங்களும், சர்வதேச மற்றும் மாநில போட்டியாளர் களால் சிறந்த முறையில் கற்றுத் தரப்பட உள்ளதாக இம்மையத்தின் ஒருங்கிணைப் பாளர் சஞ்சய் பிரதாப் தெரிவித்தார்.