2ஆவது மண்டல அலுவலகத்தில் வாலிபர் சங்கத்தினர் மனு
திருப்பூர், டிச. 6 – திருப்பூர் 20ஆவது வார்டு பகுதி களில் சாலை, சாக்கடை வசதி கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் பிச்சம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். 20ஆவது வார்டு அவிநாசி நகர், ஜெயலட்சுமி நகர், திருமுருகன் நகர் பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதி கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள் தலைமையில் வெள்ளியன்று வாலிபர் சங்கத்தினர் இரண்டாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித் தனர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறு முகம், உடனடியாக மேற்கண்ட பகு திக்கு வந்து பார்வையிட்டார். சுகா தார அதிகாரிகள், குழாய் ஆய்வா ளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்தனர். முதல் கட்டமாக குப்பை களை அகற்றுவது, குண்டும், குழியு மான சாலைகளில் மண் கொட்டுவது ஆகிய பணிகளை மேற்கொண்டனர். இந்த மனுக் கொடுக்கும் போராட் டத்தில் ஒன்றியத் துணைத் தலைவர் செல்வகுமார், கிளை நிர்வாகிகள் கார்த்திக், பிரபாகரன், சுந்தர், சுரேஷ், சேவியர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.