tamilnadu

அரசு ஊழியர் சங்க தலைவர் பணி நீக்கம் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 11- ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் செவ்வாயன்று கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில், பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பழி வாங்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர் மீதான நடவடிக் கையை ரத்து செய்ய வேண்டும். பணி  ஓய்வு கால பண பயன் உள்ளிட்டவை களை அவருக்கு உடனே வழங்க வேண் டும். இவரைப்போல, பிற மாவட்டங் களிலும் ஊரக வளர்ச்சி துறை உள் ளிட்ட பிற துறைகளில் பணி ஓய்வு நாளில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியு றுத்தி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கருப்பு பட்டையு டன் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் செவ்வாயன்று கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.ரவிசந்திரன் தலைமை வகித் தார். மாநில செயலாளர் ஜெ.பாஸ் கர்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியஅலுவலகங்களிலும் மதிய உணவு இடைவேளையின் போது அரசின் பழிவாங்கும் நடவடிக் கைக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. 

சேலம்

சேலம் மாவட்ட முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாரமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திருவரங்கன், மாவட்ட செயலாளர் ஜான் ஆன்ஸ்ட் டீன், தலைவர் வாசுதேவன், செயற் குழு உறுப்பினர் வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.