tamilnadu

சினிமா பாணியில் ஓடும் லாரியில் கொள்ளை

கோவை, செப்.10- ஈரோட்டிலிருந்து ஜவுளி பார்சல்களை ஏற்றி சென்ற லாரியில் ஜவுளிப் பண்டல் களை சினிமா பாணியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஓட்டுநர்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ரவிக்குமார் என்பவர் ஜவுளி பார்சலை ஏற்றி கொண்டு கேரளாவுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். பெருந்துறை விஜயமங்க லம் டோல்கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி டோல்கேட் அருகே வந்தபோது, லாரி யில் பாரத்தை கட்டி வைத்தி ருந்த கயிறுகள் அவிழ்ந்து உள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து லாரியின் மேல் ஏறி பார்த் போது 130 பண்டல்களுடன் ஏற்றி வரப் பட்ட லாரியில் தார்ப்பாயை கிழித்து உள்ளிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 4 துணி பண்டல்கள் கிழித்து எடுத்துச் செல்லப்பட்டு உள் ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

இதுகுறித்து, கருமத்தம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது முதலில் புகாரை ஏற்க மறுத்தவர்கள் அவி நாசி காவல் நிலையத்தில் புகாரளிக்க அறிவுறுத்தி யுள்ளனர். இதன் பின்னர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அறிவுறுத்த லின் பேரில் புகார் பெறப் பட்டு வழக்குப்பதிவு செய்த னர். ஓடும் லாரியில் சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது ஓட் டுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.