tamilnadu

img

புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறுக மாணவர் பெருமன்ற மாணவிகள் மாநாடு வலியுறுத்தல்

கோவை, நவ. 3- புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என மாண வர் பெருமன்றத்தின் மாண விகள் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றட் பட்டது.  அனைத்திந்திய மாண வர் பெருமன்றத்தின் மாண விகள் மாநில மாநாடு கோவை காட்டூர் தியாகிகள் நிலையத் தில் துவங்கியது. முன்னதாக கோரிக்கை களை முன்வைத்து பெண்கள் பாலிடெக் னிக் கல்லூரி அருகில் இருந்து ஊர்வலம் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் சாலை, எ.டி.டி.காலனி வழியாக வஉசி பூங்கா மைதா னத்தில் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து மாநில ஒருங்கி ணைப்பாளர் ச.பூர்ணிமா நந்தினி வரவேற் றுப் பேசினார்.  மாநாட்டை வாழ்த்தி கேரள மாநில மாணவர் பெருமன்றத்தின் துணை செயலாளர் நிமிஷா ராஜு, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில செயலாளர் ஜில்.மஞ்சுளா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் மௌ. குணசேகர், மாநில செயலாளர் எஸ். தினேஷ், பள்ளி கல்வி மாநில ஒருங் கிணைப்பாளர் எஸ்.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.  முன்னதாக இம்மாநட்டில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவ வழக்கினை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து பள்ளி கல்லூரிகளி லும் கழிவறைகளில் இலவச தரமான “நாப் கின்கள்” வழங்க வேண்டும். மாணவியர் களை பாலியல் ரீதியாக சில ஆசிரியர்கள் மிரட்டுவதாக பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனைக் கட்டுப்படுத்த “ஒரு ஆசிரியை ஒரு ஆசிரியர்” வீதம் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு கட்டாயம் வர அரசு ஆணைப்பிறப்பிக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாள ராக கோவையை சேர்ந்த பூர்ணிமா நந் தினி மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்.