tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறுக கண்டன பேரணி- பொதுக்கூட்டம்

கோவை, ஜன. 25 -  குடியுரிமைத் திருத்தச் சட்டத் தைக் கண்டித்து கோவை, பொள் ளாச்சி, உதகையில் சனியன்று கண் டன பேரணி மற்றும் பொதுக்கூட் டம் நடைபெற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசியக் குடியுரிமை பதி வேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்தொ டர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கோவை, காந்தி புரம் மகளிர் தொழிற் கல்லூரி முன்பு இருந்து வஉசி பூங்கா வரை பேரணி யாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இப்பேரணியில் பங்கேற்றவர் கள் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்று மத்திய, மாநில அரசுகளை கண் டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பொள்ளாச்சி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பொள்ளாச்சி யில் அனைத்து இஸ்லாமிய கூட்டி யக்கத்தினர் சார்பில் வெள்ளியன்று கண்டன பொதுக்கூட்டம் நடை பெற்றது. பொள்ளாச்சி திருவள்ளு வர் திடலில் நடைபெற்ற இப்பொ துக்கூட்டத்திற்கு வட்டார ஜமா அத் துல் உலமா சபை தலைவர் என். முஹம்மது வஜ்ஹுல்லாஹ் மற்றும் மக்கா மஸ்ஜித் தலைவர் அல்ஜமீல் மகத்தூமி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக, வட்டார ஜமா அத்துல் உலபா சபை பொரு ளாளர் கே,முஹம்மது அப்துல் லாஹ் நிஜாமி சிராஜி வரவேற்று பேசினார். செயலாளர் சீராஜ் தீன் மஹ்ளரி தொகுப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மே 17 இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி மற்றும் சென்னை அல்ஹுதா அரபிக்கல்லூரி முதல் வர் எம்,சதீதுத்தீன் பாஜில் பாகவி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில் மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய ஜவ்ஹீத் ஜமாத், மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத் தைகள் கட்சி, தமிழ் தேசிய விடு தலை இயக்கம், தமிழ்நாடு திராவி டர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 6 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உதகை
உதகை ரயில் நிலையம் முன்பி ருந்து தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சபியுதீன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேர ணியாக சென்றனர். இப்பேரணி யானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்ட நிலையில் தீயணைப்பு நிலைய சந்திப்பு அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்பு 5 பேரை மட்டும் மனுகொ டுக்க அனுமதித்தனர். முன்னதாக இந்த பேரணியில் 300 அடி நீள முள்ள தேசிய கொடியை கைகளில் பிடித்து குடியுரிமை சட்டத்தை கை விட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.