tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக

ஈரோடு, ஆக.2- மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு உருவாக்கி யுள்ள தேசிய கல்வி கொள்கை வரை வால் கல்லாமையை அதிகமாக உருவாகும். 3,5,8 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பொதுத் தேர்வு என்பது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகமாக்கும். எனவே, இந்த கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண் டும். கல்வியை முழுவதுமாக மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியில் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்த கையெழுத்து இயக் கத்திற்கு சிபிஎம் நகர செயலாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சாலை போக்குவரத்து தொழிலா ளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கனகராஜ், சுமைப்பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட உதவித்தலை வர் ஒ.முருகன், விசைத்தறி தொழி லாளர்கள் சங்க உதவித் தலைவர் கே.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.