தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கலில் பிரச்சார இயக்கம்
நாமக்கல், செப்.29- கல்விக் கொள்கை வரைவை, மத்திய அரசு திரும்பப் பெற வலியு றுத்தி ஞாயிறன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வாகன பிரச் சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில், 3 மற்றும் 5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும், 9 மற்றும் 10, 11,12 ஆகிய வகுப்புகளுக்கு பருவத்தேர்வு நடைபெறுகிறது. இது ஏழை எளிய மற்றும் கிராமப் புற மாணவர்களின் கல்வி வாய்ப்பை தட்டி பறிப்பதோடு இடைநிற்றலை அதிகரிக்க செய்யும். எனவே தேசிய கல்விக் கொள்கை வரைவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்விச் சுமை அதிகரிப்பதோடு தாய்மொழி வழிக் கல்வியை கேள்விக்குறி யாக்கும். எனவே இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கை வலியுறுத்தி வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி பாளையம், திருச்செங்கோடு. எலச்சிபாளையம், ஆண்ட களூர்கேட், நாமக்கல், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்றது. இதில் கலை நிகழ்ச்சி யின் மூலம் பிரச்சாரம் மேற் கொண்டனர். இப்பிரச்சார இயக்கத்திற்கு, மாவட்டத் தலைவர் ம.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.மாதேஷ் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் இரா.மலர்விழி முன்னிலை வகித்தார். பிரச்சார பயணத்தில் கோரிக்கைகளை விளக்கி மேற்கு மண்டல மாநில துணைத் தலைவர் தோ.ஜான்கிறிஸ்துராஜ், மாநிலச் செயலாளர் இரா.வின்செட் உள் ளிட்டோர் விளக்க உரையாற் றினர். மாநில துணை பொதுச் செயலாளர் தா.கணேசன் சிறப்பு ரையாற்றினார். ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.