கோவை, ஜூன் 21– மாணவர்களின் நலனுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மாண வர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப் பாட்டமும், புரட்சிகர மாணவர் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டமும் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமை பறிப்பு, இந்தி திணிப்பு, குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, கல்வியை வியாபாரமாக்குவ தோடு, காவிமயமாக்கும் முயற்சி, நீட் தேர்வு உள்ளிட்ட மாணவர் களை பாதிக்கும் மத்திய அரசின் கல்வி கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் மாணவர் சங் கங்களின் கூட்டமைப்பின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார், இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் வி.மாரி யப்பன், மாநில செயற்குழு உறுப் பினர் காவ்யா, மாவட்ட தலை வர் தினேஷ், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் குணசேக ரன் உள்ளிட்ட மாணவர் சங்க தலைவர்கள் கண்டன உரையாற் றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று மத்திய அரசின் கல்வி காவிமயமாகும் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப் பினர்.
புதிய கல்வி வரைவு அறிக்கை எரிப்பு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத் திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், பேருந்து நிலையத்தில் வைத்து கல்விக் கொள்கையின் வரைவு நகலை எரிக்க முயன்றனர். இதனைடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனை வரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.