அன்னூர், ஜன. 25- அன்னூர் அருகே செந்தாம்பாளையத்தில் பொதுக்கழிப்பிடம் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மச்சகவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட செந்தாம்பாளையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் பொதுக்கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தரப்படாததால் அப்பகுதி களில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே, இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.