tamilnadu

img

மலக்குழி மரணங்களை இனியும் அனுமதிக்கக்கூடாது

கோவை, ஆக.11- மலக்குழியில் இறங்கி விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாகும் சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட் டில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற் றினார்.  சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் 13 ஆவது மாநாடு வரதராஜபுரம் சர்க்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் ஞாயிறன்று நடை பெற்றது. சங்க கொடியை எம்.பரம சிவம் ஏற்றிவைத்தார். ஜே.ராஜாக் கனி வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாவட்ட துணை தலைவர் வி.பெரு மாள் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட செயலாளர் வழக் கறிஞர் இர.ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினர். பொதுச்செய லாளர் கே.ரத்தினகுமார், பொரு ளாளர் பி.கனேசன் ஆகியோர் அறிக் கையை முன்வைத்து பேசினர். இதனையடுத்து சங்கத்தின் கௌரவ தலைவராக பி.ஆர்.நடரா ஜன் எம்,பி., தலைவராக சி.பத்மநா பன், பொதுச்செயலாளராக கே.ரத் தினகுமார், பொருளாளராக பி.கணேசன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.  இம்மாநாட்டை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பின ரும், சங்கத்தின் கௌரவ தலைவரு மான பி.ஆர்.நடராஜன் உரையாற் றினார். அப்போது அவர் பேசுகை யில், கோவை மாநகராட்சி தற் போது 100 வார்டுகளாக அதிக ரித்துள்ளது. ஆனால், துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு தொழி லாளர்களின் எண்ணிக்கை அதிக ரிக்காமல் நகரத்தின் தூய்மை எப்படி சாத்தியப்படும். மலைபோல் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால் துப்புரவு தொழிலாளர் களை கைகாட்டும் நிலை உள்ளது. ஆனால், உண்மையில் தேவைக் கேற்ப இத்தொழிலாளர்களின் எண் ணிக்கையை உயர்த்தாத அதிகாரி களே சுகாதார சீர்கேட்டிற்கு காரண மாக உள்ளனர். பல ஆண்டுகள் பணி செய்த துப்புரவு தொழிலாளர்களை  நிரந்திரப்படுத்தாமல் ஒப்பந்த கூலி களாகவே இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இத்தொழிலாளர்களின் அவ சியத்தை உணர்ந்து அரசு இவர் களை உடனடியாக நிரந்திரப்பணி யாளர்களாக அங்கீகரிக்க வேண் டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயி ரத்தை வழங்க வேண்டும்.  மலக்குழி யில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலக்குழி யில் இறங்கி விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாவதை ஒரு  போதும் ஏற்க முடியாது. மலக்குழி மரணங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்.  ஊதியம் உள்ளிட்ட பொருளா தார கோரிக்கைகளுக்காக போரா டும் நாம் இனி சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும். குறிப்பாக சாதி ஆணவக் கொலை போன்ற கொடூரங்கள் நடைபெறாமல் தடுக்க வலுவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம். அத்தகைய பாதையை நோக்கி முன்னேறு வோம் என உரையாற்றினார்.  முன்னதாக, மாநாட்டில் ஊராட்சி பணியாளர்களுக்கு, நக ராட்சி பணியாளர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி சுய உதவிக்குழு பணி யாளர்களுக்கு பி.எப், இஎஸ்ஐ  வசதியை செய்து கொடுக்க வேண் டும். நிரந்திர தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் போன் றவற்றை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டில் கோவை  மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தூய்மைத்தொழிலார் கள் பங்கேற்றனர். முடிவில் கே.பழனிச்சாமி நன்றி கூறினார்.