உடுமலை, ஆக. 26- நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்பு ணர்வு பேரணி உடுமலையில் திங்களன்று நடை பெற்றது. உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகள், புதிய கட்டடங்கள், மருத்துவமனை, திரைய ரங்கம், திருமண மண்டபம், பள்ளி, கல்லூரி, ,வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதிகளில் கட்டாய மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேமிப்பதால் நிலத்தடி நீர்மட் டம் உயரும் என்பதை வலியுறுத்தி உடுமலை நக ராட்சி மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ஜல் சக்தி அபி யான் திட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த இப்பேரணி விழிப்புணர்வு பாதாகைகளுடன் நகராட்சி அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.