அவிநாசி, ஜூலை 6- அவிநாசியை அடுத்த சேவூரில் உள்ள மயானத் திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால், இறந்தவர் களை அடக்கம் செய்ய வருப வர்கள் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். எனவே முறையான பாதை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவூர் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் இறந்த வர்களை அடக்கம் செய் வதற்கு சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மயானம் (சுடுகாடு) உள்ளது. இந்த மயானத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக சுற்றுச்சுவர், எரிமேடை, மின்விளக்கு, தண்ணீர், பாதைவசதி உள்பட எந்த வித மான அடிப்படை வசதிகள் எதுவு மில்லை. மயானம் பகுதி முழுவதும் முட்கள், புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் மயானத்திற்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இது போல தான் மயானம் உள்ளது. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மயானத்திற்கு என நிதி ஒதுக்கி எந்தவித மான அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை. இரவு நேரங்களில் உடலை அடக்கம் செய்ய வருபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மின்விளக்கு இல்லாததால் தீ பந்தம் மற்றும் அரிக்கன் விளக்குகளை ஏந்தி சென்று உடலை அடக்கம் செய்யும் சூழ்நிலை இன்று வரை நீடிக்கிறது. இதேபோல் சேவூர் வடக்கு வீதி இருந்து கோபி சாலையில் உள்ள மயானமும் பாதை வசதி இல்லாமல் உள்ளது. உடனடியாக இரு மயானங்களுக்கும் பாதை வசதி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.