tamilnadu

img

அவிநாசி காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அவிநாசி, மே 6-சாதியை கூறி தாக்கியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க மறுக்கும் அவிநாசி காவல்துறையினரை கண்டித்து தெக்கலுார் சூரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசி அருகேயுள்ள தெக்கலுார்சூரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர் கடந்த வெள்ளியன்று பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, அவரது மனைவி துளசி, அவரது உறவினர் ஜெயமணி ஆகியோர் பத்மாவதியை தண்ணீர் பிடிக்க விடாமல்தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதுகுறித்து, நியாயம் கேட்டபத்மாவதியின் கணவர் விஜயகுமாரைவேலுச்சாமி தரப்பினர் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக பத்மாவதி மற்றும்அவரது கணவர் விஜயகுமார் ஆகியோர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில், வேலுச்சாமி, அவரது மகன்பூபதி உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஞாயிறன்று வேலுச்சாமி தரப்பினர் பத்மாவதியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்டதுடன், அவரது சாதியை இழிவாக குறிப்பிட்டு பேசியதாகவும் கூறி பத்வமாதி மீண்டும் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால், இப்புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம்காட்டி வருவதாக கூறி பத்மாவதியின்உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவிநாசி காவல்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப்புகார்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.