tamilnadu

img

குடியிருப்பின் அருகே டாஸ்மாக் அமைக்க முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு

பொள்ளாச்சி, செப்.27- ஆனைமலை அருகே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கட்டு மான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட ஒடையகுளம் பேரூராட்சிக்குட்பட்ட மக்கள் சக்தி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர்.  இந்நிலையில் இக்குடியிருப்பின் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கான கட்டு மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தின் நிர்வாக இயக்குனர் ரங்கநாதன் தலைமையில் ஆசிர மத்தின் ஊழியர்களும்,  மக்கள் சக்தி நகர் பகுதி மக்களும் புதிததாக கட்டப்படும் மதுபான கடையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்காலிகமாக கட்டிடம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மக்கள் சக்தி நகரில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மதுபானக் கடையை அரசு கொண்டு வருவது என்பது இம்மக்களை திட்டமிட்டே குடிநோயாளியாக்கும் செயலாகும். மேலும், இப்பகுதியில் மகாத்மா காந்தி ஆசிரமும் செயல்படுவதால் பெண்கள், ஊழியர்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படும். எனவே, தமிழக அரசு மதுபான கடையினை இப்பகுதியில் அமைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.