பொள்ளாச்சி, மார்ச் 12- விருப்ப ஓய்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய தொகையை உடனடியாக வழங்கிடக் கோரி, பொள்ளாச்சி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தினர் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 01-01-2017 முதல் பஞ்சப்படி அடிப்படையில் ஓய்வூதியத்தை மாற்றம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மருத் துவ பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல் அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் பொள்ளாச்சி வட்டக் கிளை தலைவர் வி.சசிதரன் மற்றும் பொறுப்பாளர் ஏ.சாகுல்அமீது ஆகியோர் தலைமை வகித்தனர். கிளைச் செயலாளர் என்.சிவசாமி வரவேற்று பேசினார்.மாநில அமைப்புச் செயலாளர் பி.நிசார் அகமது, ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.ஜெய மணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி உரையாற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.தங்க மணி, வட்ட கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன், கிளைச் செயலாளர் எஸ்.மனோகரன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் நடராஜன் நன்றிகூறி னர். இதில் திரளானோர் கலந்துக்கொண் டனர்.