tamilnadu

img

ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை முறையாக வழங்குக

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

உதகை,மார்ச் 3- பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை முறையாக வழங்க  வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள பிஎஸ்என்எல் மனமகிழ் மன்றத் தில் அனைத்து இந்திய பிஎஸ்என்எல்  தொலைத்தொடர்பு இலாகா ஓய்வூதி யர் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் வி.மகேஷ்வரன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.சி.நரசிம்மன் கலந்து கொண்டு சிறப் புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் நிசார் அகமது, தமிழ்நாடு  தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.வினோத், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜேக்கப் மோரிஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக, இந்திய மக்களுக்கு  எதிரான சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி  ஆகிய சட்டங்களை திரும்பப்பெற  வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியர்க ளுக்கு ஓய்வூதியத்தை 15 சதவிகிதம் உயர்த்தி உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். மாத சம்பளத்தை முறை யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச் சியில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.