tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிடுக அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஆக.14- மத்திய அரசு வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயி ரம் மாநில அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோவை மாவட்ட 3 ஆவது மாநாடு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப் சிவக்குமார் அரங் கில், மாவட்ட தலைவர் என்.அரங்க நாதன் தலைமையில் புதனன்று நடை பெற்றது. மாவட்ட இணைச் செயலா ளர் எம்.ஏசையன் வரவேற்புரை யாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயலாளர் நெல்லை எஸ்.ஆறுமுகம் உரையாற்றினார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநாட்டில் பங் கேற்று சிறப்புரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் என்.சின்னசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.குமார் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மதன், பொருளாளர் ப.நடராஜன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத் தையே நடைமுறைப்படுத்த வேண் டும். சத்துணவு, அங்கன்வாடி, வரு வாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.8,750 வழங்கப்பட வேண்டும். மருத் துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை களுக்கும் உண்மையான காசில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் வேலைவாய்ப்புகளில் தமிழக வேலையற்றோர்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதனையடுத்து, இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக என்.அரங்கநாதன், செயலாளராக எஸ்.மதன், பொருளாளரக பி.நடராஜன் உள்ளிட்ட 11 புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர்.  மாநாட்டை நிறைவு செய்து சங்கத் தின் மாநில துணை தலைவர் எஸ்.சந்திரன் உரையாற்றினார். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.