தருமபுரி, ஆக.26- நலவாரிய பலன்களை காலதாம தம் செய்யாமல் உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டு மான அமைப்புச்சார தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரியில் பேரணி நடைபெற் றது. நான்கு கோடிக்கும் மேற்பட்ட வாரிய உறுப்பினர்கள் பெற்று வரும் நலப்பயன்களை ரத்து செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். கட்டுமான நலநிதி, செஸ் வரியை தமிழக அரசு பிற செயல்பாடுகளுக்கு செலவிட்டதை திரும்ப நலநிதியில்சேர்க்க வேண் டும். கட்டுமான தொழிலாளர்க ளுக்கு வீட்டுமனை வழங்கி அரசு வீடுகட்டி கொடுக்க வேண்டும். வாரிய அலுவலகத்தில் தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், பெண்களுக்கு 50 வயதி லும்,ஆண்களுக்கு 55 வயதிலும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். தருமபுரி நலவாரிய அலுவலகத்தில் பதிவு அட்டை,நலவாரிய பலன் களை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட நலவாரிய கட்டுமான அமைப்புச் சார தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பேரணி நடை பெற்றது. தருமபுரி அரசு மருத்துவ மனைமுன்பு துவங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தின் அருகே உள்ள கட்டுமான நலவாரிய அலுவலகம் வந்தடைந் தது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பு தலைவர் ஆர்.சுதர்சனம் தலைமை வகித்தார்.கூட்டமைப்பு செயலா ளர் கொ.கோவிந்தராஜ், நிர்வாகி கள் லட்சுமிநாரயணன், வெ.குழந் தைவேலு, கே.சிவாஜி, கோவிந்த ராஜ், கண்ணபிரான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். முடிவில் கூட்டமைப்பு பொரு ளாளர் முருகேசன் நன்றி கூறினார்.