கோவை, ஆக. 18 - கொரோனா தடுப்பு பணிகளில் ஈடு பட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை உடன டியாக வழங்க வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு வினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங் களாக கொரோனா தொற்றால் பாதிக்கப் படுபட்டவர்களின் எண்ணிக்கை அதிக ரித்து கொண்டே செல்கிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் தொற்று தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இறப்பு விகிதம் கூடுதலாகிக் கொண்டே செல்கிற நிலையை தடுத்து நிறுத்த வேண் டும்.
இதர சிகிச்சைக்காக தனியார் மருத்து வமனையை தேடி வருவோரிடம் கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத் துதல் என்பதன் பெயரால் பெரும் தொகையை வசூலித்து வருவதை கண்கா ணித்து முறைப்படுத்த வேண்டும். நோய் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய முன்களப்பணியாளர்களுக்குa அரசு அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணம் இது வரை யாருக்கும் வழங்கப்படாத நிலையில், இதை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற அரசு கண்டறிந்துள்ள இ.எஸ்.ஐ, அரசு பொது மருத்துவமனை, கொடிசியா வளா கம் தவிர இன்னும் பரந்த வளாகங்களை கண்டறியப்பட வேண்டும். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர் களுக்கும் அளிக்கப்படும் உணவு, சிகிச்சை விபரம் மற்றும் கட்டண விபரங்கள் ஆகிய வற்றை முழுமையாக மக்களுக்கு வெளிப் படுத்த வேண்டும் என மனுவில் வலியு றுத்தியுள்ளனர்.