சிஐடியு பிரச்சார இயக்கம்
கோபி, நவ.20- முறைசாரா நலவாரிய பணப்பயன் களை உயர்த்திடக்கோரி சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடுக. நூறு நாள் வேலை திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதக மான சட்டத்திருத்தங்களை கைவிட வேண் டும். முறைசாரா நலவாரிய பணப்பயன் களை உயர்த்திட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி எதிர்வரும் ஜனவரி 23 முதல் 27 ஆம் தேதி வரை சென்னையில் சிஐடியு அகில இந்திய 16 வது மாநாடு நடை பெறுகிறது. இம்மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், நாய்க்கன்காடு, மொடச்சூர், ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ரங்க சாமி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சி.பிரகாசம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் வி.ஆர்.மாணிக் கம், வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நந்தக்குமார், துரைராஜ், பாண் டியன், வேலுச்சாமி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோல், கோவை சூலூர் பகுதியில் புதனன்று நடைபெற்ற பிரச்சார இயக் கத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி. பத்மநாபன், சிபிஎம் சூலூர் தாலுகா செய லாளர் எம்.ஆறுமுகம், சிஐடியு நிர்வாகிகள் ரத்தினகுமார், ராஜன், ஜோதிபாசு உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.